logo
இயக்குநர் ஷங்கருக்கு ஜாமினில் வெளிவர முடியாத வகையில் பிடிவாரண்ட் உத்தரவு

இயக்குநர் ஷங்கருக்கு ஜாமினில் வெளிவர முடியாத வகையில் பிடிவாரண்ட் உத்தரவு

03/Feb/2021 05:06:44

எந்திரன் திரைப்பட கதை தொடர்பான வழக்கில் இயக்குநர் ஷங்கருக்கு பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்த படம் எந்திரன். இந்த திரைப்படத்தின் கதை என்னுடையது. கடந்த 1996-ஆம் ஆண்டு உதயம் என்ற பத்திரிக்கையில் ஜூகிபா என்ற தலைப்பில் தொடர்கதை எழுதினேன். அந்தக் கதையை எனது அனுமதி பெறாமல் இயக்குநர் ஷங்கர் எந்திரன் படமாக எடுத்துள்ளார். இதுதொடர்பான புகாரை காவல் துறையினர் ஏற்கவில்லை எனக் கோரியிருந்தார். 

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி இயக்குநர் ஷங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கை ரத்து செய்ய மறுத்து, இந்த வழக்கில் இயக்குநர் ஷங்கருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளதாக உத்தரவிட்டிருந்தது. 

மேலும், இயக்குநர் ஷங்கர் பிரபலமானவர் என்பதால், எழும்பூர் நீதிமன்றத்துக்கு அவர் வந்தால் கூட்டம் கூடிவதோடு, விசாரணைக்கு இடையூறு ஏற்படும். எனவே தேவைப்படும்போது மட்டும் அவர் ஆஜராக வேண்டும் என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது. உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து இயக்குநர் ஷங்கர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஆரூர் தமிழ்நாடான் எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு எழும்பூர் 2-ஆவது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இயக்குநர் ஷங்கரும் ஆஜராகவில்லை, அவரது தரப்பில் வழக்குரைஞரும் ஆஜராகவில்லை.

இதனையடுத்து, இயக்குநர் ஷங்கருக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், விசாரணையை வரும் பிப்ரவரி 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் புகார்தாரர் தரப்பு சாட்சி விசாரணை நடைபெறும் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளா

Top