logo
புதுக்கோட்டையில் குடியரசு நாள்  விழா: 162 பேருக்கு பாராட்டுச்சான்றிதழ்களை அளித்தார் ஆட்சியர்

புதுக்கோட்டையில் குடியரசு நாள் விழா: 162 பேருக்கு பாராட்டுச்சான்றிதழ்களை அளித்தார் ஆட்சியர்

28/Jan/2021 03:45:27

புதுக்கோட்டை-ஜன:  புதுக்கோட்டை சேமப்படை மைதானத்தில் நடைபெற்ற நாட்டின் 72-ஆவது குடியரசு நாள்  விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். தொடர்ந்து  மாவட்ட காவல் கண்காணிப்பாளா; எல்.பாலாஜி சரவணன் முன்னிலையில் நடந்த காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டபின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 162 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.


விழாவில், காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 63 காவலர்களுக்கு முதலமைச்சரின் பதக்கங்களையும் வருவாய்த்துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறை, புவியியல் மற்றும் சுரங்கத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், பள்ளிக் கல்வித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளைச் சேர்ந்த 162 அலுவலர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்களையும் ஆட்சியர்  வழங்கினார்.


பின்னர் புதுக்கோட்டை மேல 3-ஆம் வீதியில் வசித்து வரும் காலம் சென்ற சுதந்திர போராட்ட தியாகி சிவப்பிரகாசத்தின்  இல்லத்திற்கு நேரில் சென்று அவரது மனைவி மணிமேகலைக்கு கதர்ஆடை அணிவித்து பரிசுகள் வழங்கினார். 

முன்னதாக புதுக்கோட்டை சேமப்படை மைதானத்தில் நமணசமுத்திரம் பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் சாட் பேப்பரால் உருவாக்க்கி வைத்திருந்த  இந்திய இராணுவ தளவாட மாதிரிகள் ஆட்சியர் பார்வையிட்டார்.  

 இதில், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எம்.சந்தோஷ்குமார், அறந்தாங்கி சார் ஆட்சியர் ஆனந்த் மோகன், மாவட்ட ஊராட்சித்தலைவர் ஜெயலெட்சுமி, வருவாய் கோட்டாட்சியர்கள் தண்டாயுதபாணி, டெய்சிகுமார், நகராட்சி ஆணையர் (பொ) ஜீவாசுப்பிரமணியன், வட்டாட்சியர் முருகப்பன், மாவட்ட வேளாண் விற்பனை குழுத்தலைவர் பாஸ்கர் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Top