logo
தில்லி விவசாயிகள் மீது போலீசார் தடியடி: கொமதேக  கண்டனம்

தில்லி விவசாயிகள் மீது போலீசார் தடியடி: கொமதேக கண்டனம்

26/Jan/2021 09:46:27

சென்னை: கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சியின் பொதுச்செயலர் ஈ.ஆர். ஈஸ்வரன் வெளியிட்ட அறிக்கை: மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தலைநகர் தில்லியில் மாதக்கணக்கில் போராடி வரும் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை  டிராக்டர் பேரணியை ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்த பேரணியில் தேவையில்லாத வன்முறையை ஏற்படுத்தி விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க மத்திய அரசு எடுத்திருக்கும் தவறான நடவடிக்கையால்  இந்தியாவிற்கு உலகளவில் தலைக்குனிவை ஏற்படுத்தி இருக்கிறது. 

விவசாயிகள் மீது தடியடி நடத்தி போலீசார் அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டிருப்பது ஏற்புடையதல்ல. மக்களாட்சி மலர்ந்த நாளான குடியரசு தினத்தில் விவசாயிகளின் குரல்வளையை மத்திய அரசு நெரித்து இருக்கிறது. பல உயிர்களை இழந்தும் உறுதியோடு போராடும் விவசாயிகளுக்காக மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.

மக்களாட்சியினுடைய நோக்கதை பாரத பிரதமர் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு சட்டமும் மக்களுக்காக மட்டுமே இருக்க வேண்டும். சர்வாதிகார போக்குடன் செயல்படும் மத்திய அரசை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

Top