logo
தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயப்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். சிபிஎம் கோரிக்கை

தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயப்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். சிபிஎம் கோரிக்கை

17/Jan/2021 07:41:51

புதுக்கோட்டை, ஜன: தொடர் மழையால் அனைத்து விவசாயப் பயிர்களும் முற்றிலுமாக நாசமடைந்துள்ளது. எனவே, அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துவருவது மகிழ்ச்சியே. அதே நேரத்தில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள நெல், கடலை, உளுந்து உள்ளிட்ட அனைத்துப் பயிர்களும் நீரில் மூழ்கி நாசடைந்துள்ளன. ஆலங்குடி, பொன்னமராவதி, அறந்தாங்கி, மணமேல்குடி, ஆவுடையார்கோவில், கறம்பகுடி  உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் லட்சகக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் இத்தகைய பாதிப்புகள் எற்பட்டுள்ளது.

குறிப்பாக நெல்வயல்கள் நன்றாக விளைந்து அறுவடைக்கு காத்திருக்கும் தருணத்தில் இந்த கனமழை பெய்துவருகிறது. இதானல் பயிர்கள் முற்றிலுமாக நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. எந்த வகையிலும் விவசாயிகள் அறுவடை செய்ய முடியாத அளவுக்கு வயலிலேயே விளைந்த நெல் முளைத்துவிட்டது. விவசாயிகளுக்கு வைக்கோல்கூட மிஞ்சப்போதில்லை.

எனவே, தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும்  பாதிப்புகளை கணக்கீடு செய்கிறோம் என காலம் தாழ்த்தாமல் சாகுபடி செய்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் சாகுபடி பரப்பளவுக்கு ஏற்ப உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே போல கடலை, உளுந்து, காய்கறி செடிகள், பூந்தோட்டங்களும் மழையாக பெரிய அளவிற்கு பாதிப்பு எற்பட்டுள்ளது. இவற்றிகும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பல இடங்களில் குடிசை வீடுகளும், ஓட்டுவீடுகளும் சேதமடைந்துள்ளன. பகுதியாக சேதமடைந்த வீடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், முற்றலுமாக சேதடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகள் கட்டிக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற (ஜன.20) புதன்கிழமை  மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பாகவும் பாதிக்கப்பட்ட விவசாயிகளைத் திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டங்களை நடத்த கட்சியின் சார்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.


Top