logo
ஈரோடு மாநகர் பகுதியில் ஒரே நாளில் முக கவசம் அணியாமல் வந்த 100 பேருக்கு அபராதம்

ஈரோடு மாநகர் பகுதியில் ஒரே நாளில் முக கவசம் அணியாமல் வந்த 100 பேருக்கு அபராதம்

23/Sep/2020 08:56:54

ஈரோடு:  ஈரோடு மாநகர் பகுதியில்  கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக பரவி வருகிறது. மொத்த மதிப்பில் 60 சதவீதம் பேர் ஈரோடு மாநகர் பகுதியை சேர்ந்தவர்கள் தான். இதை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மாநகராட்சியுடன் இணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. முக கவசம் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இன்னும் சிலர் வெளியே சுற்றுவதைத் காணமுடிகிறது. இதையடுத்து முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூ. 200 அபராதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது.  மா நகர் பகுதி முழுவதும் மாநகராட்சி அலுவலர்கள் சுகாதார பணியாளர்கள் வருவாய்த்துறையினர் போலீஸ் உயர் அதிகாரிகள் ஆங்காங்கே சோதனை செய்து அபராதம் விதித்து வருகின்றனர். நேற்று மாலை பன்னீர்செல்வம் பார்க் கருங்கல்பாளையம் வீரப்பன்சத்திரம் சூரம்பட்டி போன்ற பகுதிகளில் அலுவலர்கள் ஆங்காங்கே நின்று முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர்.நேற்று மாலை முதல் இரவு வரை 100 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.  இதன் மூலம் ஒரே நாளில் 20 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டது. இதேபோல் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள கடையில் ஊழியர்கள் முக கவசம் அணியாமல் இருந்ததை அலுவலர்கள் சோதனையின் போது கண்டுபிடித்தனர்.  இதையடுத்து ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது. இதைப் போல் தொடர்ந்து வாகன சோதனை களும் கடைகளில் சென்று ஆய்வு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். முக கவசம் நம் உயிர் கவசம் என்பதை மக்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Top