logo
நேரடி நெல்விதைப்பில் கூடுதல் மகசூல் பெறும் வழிகள்

நேரடி நெல்விதைப்பில் கூடுதல் மகசூல் பெறும் வழிகள்

23/Sep/2020 01:26:31

புதுக்கோட்டை மாவட்டம்,  ஆவுடையார்கோவில், மணமேல்குடி மற்றும் அரிமளம் வட்டார விவசாயிகள் நெல் நுண் சத்து இடுவதன் மூலம் பதரில்லாத தரமான நெல்மனணிகளுடன் கூடுதல் மகசூல் பெறலாம் என வேளாண் இணை இயக்குநர் இராம.சிவகுமார்  தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆவுடையார்கோவில், மணமேல்குடி மற்றும் அரிமளம் வட்டாரத்தில் பெரும்பாலான விவசாயிகள் நேரடி நெல் விதைப்பின் மூலமே நெல்பயிர் சாகுபடி செய்துள்ளனர். தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் பெரும்பாலான விவசாயிகள் களையெடுத்து முதல் மேலுரம் இடும் பணியினை மேற்கொள்ளவுள்ளனர். மேலுரம் இடுவதற்கு முன்னர் நெல் நுண் சத்து ஏக்கருக்கு 5 கிலோ வீதம் இடுவதன் மூலம் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்துகளைத் தவிர நெல்பயிருக்குத் தேவையான நுண் சத்துக்களான இரும்பு, மாங்கனீசு, துத்தநாகம், தாமிரம் ஆகிய சத்துக்களும் பயிருக்கு கிடைத்து செழிப்பான கதிர்கள் உருவாகவும் பதரில்லாத நெல்மணிகளைப் பெறவும் உதவுகிறது. எனவே, அந்த பகுதி விவசாயிகள் தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 50 சதவீத மானிய விலையில் நெல் நுண் சத்து உரங்களை வேளாண் மையத்திலிருந்து பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்

Top