logo
அரசியல் கட்சி தொடங்கவில்லை… என்னை மன்னியுங்கள்: நடிகர் ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு

அரசியல் கட்சி தொடங்கவில்லை… என்னை மன்னியுங்கள்: நடிகர் ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு

30/Dec/2020 12:09:53

சென்னை: நான் அரசியல் கட்சி தொடங்கவில்லை, உடல்நிலையை கருத்தில் கொண்டு நான் அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவாரா? மாட்டாரா? என்ற அவரது ரசிகர்களின் வெகு கால எதிர்பார்ப்புக்கு சமீபத்தில் முற்றுப்புள்ளி விக்கும் விதமாக தான் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாகவும் அதற்கான அறிவிப்பை வரும் டிசம்பர் 31-ஆம் தேதி தெரிவிப்பதாக கூறி இருந்தார்.

அதனால் தான் நடித்து வந்த அண்ணாத்த படத்தை முடித்து கொடுக்கும் வகையில் ஐதராபாத் சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அப்போது, அந்த படக்குழுவில் உள்ள சிலருக்கு கொரொனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து ரஜினிகாந்துக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.

ஆனால் ரஜினிகாந்துக்கு கொரொனா பாதிப்பு இல்லை என பரிசோதனை முடிவுகள் வந்தது. இந்நிலையில், இந்திய அரசியல் வட்டாரத்தில் யாருமே எதிர்பார்க்காத விதமாக தான் அரசியல் கட்சியை தொடங்கவில்லை என்றும் தன்னை மன்னித்து விடுங்கள் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு ஆதரவாளர்கள் உள்பட அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.


Top