logo
மறக்க முடியுமா... (டிசம்பர் 26, 2004)  இன்று சுனாமி தாக்கிய 16-வது ஆண்டு நினைவு நாள்..

மறக்க முடியுமா... (டிசம்பர் 26, 2004) இன்று சுனாமி தாக்கிய 16-வது ஆண்டு நினைவு நாள்..

26/Dec/2020 10:54:01

தமிழகத்தை சுனாமி தாக்கி 16 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தங்கள் உயிருக்கு உயிரான, அன்புக்குரிய சொந்தங்களைப் பறிகொடுத்த குடும்பத்தினர் இன்னும் மீளா சோகத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த 2004 இதே நாளில்தான், இந்தோனேஷியா சுமத்ரா தீவில் நிலநடுக்கமும், அதனைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது.தாலாட்டுடன் கரையைத் தொட்டுச் சென்ற வங்கக் கடலின் அலைகள் அன்று திடீரென தனது ஆக்ரோஷத்தைக் காட்டின. 

பல மீட்டர் அடி உயரத்துக்கு எழுந்த அலைகள் மக்கள் சுதாரிப்பதற்குள் ஆயிரக்கணக்கான வர்களை வாரி சுருட்டிக் கொண்டு கடலுக்குள் சென்றது.

வீடுகள், கட்டிடங்கள், வாகனங்கள், உயிரினங்கள் என கண்ணிமைக்கும் வினாடி நேரத்தில் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.ஆழிப்பேரலையின் கோரத் தாண்டவத்தில் தமிழகத் தில் கடலூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர்.

இதற்கு முன்னர் எந்தவொரு இயற்கை சீற்றமும் ஏற்படுத்திடாத பேரழிவை ஏற்படுத்தியது சுனாமி.பல்லாயிரக் கணக்கான கடலோர மக்களின் வாழ்க்கையையும் புரட்டிப் போட்டுவிட்டது. இதனால், மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய-மாநில அரசுகளும், சர்வதேச அமைப்புகளும் பல்வேறு வகையான நிவாரண உதவிகளை வழங்கி மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டபோதிலும், உறவுகளையும், உடமைகளையும் இழந்த மக்களின் மனதில் ஏற்பட்ட சோக வடுக்கள் இன்றளவும் மறையவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. பேரிழப்பை ஏற்படுத்திய சுனாமி வந்து, 16 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், நீங்காத நினைவுகளுடன் சோகத்தை தாங்கி நிற்கின்றனர் தமிழக கடலோர கிராம மக்கள்.

Top