30/Jun/2021 07:19:50
புதுக்கோட்டை, ஜூன்: தேசிய வருவாய் வழித் திறனறித் தேர்வில் தொடர்ந்து 8-ஆவது ஆண்டாக மேலப்பட்டி நிலைப்பள்ளி செய்து வரும் சாதனையை பாராட்டி பச்சை பூமி அறநிலையம் சார்பில் மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.
விழாவுக்கு பள்ளியின் தலைமையாசிரியை சீத்தாலெட்சுமி தலைமை வகித்தார். பச்சை பூமி அறக்கட்டளை நிறுவனர் முதுகலை ஆசிரியர் அந்தோணி மேலப்பட்டி பள்ளி மாணவர்களின் தொடர் சாதனைகளான புத்தாக்க அறிவியல் விருது, வினாடி- வினா விருது,தேசிய வருவாய் வழித் திறனறித் தேர்வு தொடர் வெற்றி போன்ற பல்வேறு சாதனைகளுக்கு காரணமாக இருந்த ஆசிரியர்களைப் பாராட்டியதுடன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
இதில், பச்சை பூமி அறக்கட்டளை உறுப்பினர்கள் ஆசிரியர் இரவிச்சந்திரன், சுதர்சன் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் மகேஸ்வரன், சரவணன், வருவாய் வழித் திறனறித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் பங்கேற்றனர்.