logo

மத்தியஅரசு கொண்டு வந்துள்ள வேளான் சட்ட மசோதாவை திரும்ப பெற விவசாயிகள் வலியுறுத்தல்

23/Sep/2020 09:25:13

இதுகுறித்து, தமிழ்நாடு சிறு,குறு விவசாயிகள் சங்கத்தலைவர் கே.ஆர். சுதந்திரராசு வெளியிட்ட அறிக்கை:

 மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளான் சட்ட மசோதாவானது நாட்டில் உள்ள சிறு குறு விவசாயிகளையும்

அவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதித்து தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிலையை உருவாக்கும். ஏற்கெனவே உதய் மின் திட்டத்தில் அரசு கையெழுத்திட்டதின் விளைவாக இலவச மின்சாரமும் ஆபத்தான நிலையியில் உள்ளது. கடந்த காலங்களில் அப்போதைய முதல்வர்களான ஜெ.ஜெயலலிதா, கருணாநிதி

போன்றவர்கள் மத்திய அரசு எவ்வளவோ முயர்சித்தும் இது விவசாயிகளை பாதிக்கும் என்று கையெழுத்தவிடவில்லை. ஆனால், தற்போதுள்ள அரசு கையெழுத்திட்டதின் விளைவாக கொஞ்சம் கொஞ்சமாக மின்வாரியம் அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி வருகிறது. அதுபோல,  இன்று பயிர்கடன் பெறும் விவசாயிகள் விவசாயிகளால்  உருவாக்கப்பட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் உரிய நேரத்தில்

கடன் பெற முடியாமல் மத்திய கூட்டுறவு வங்கிக்கும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கும் விவசாயிகள் அலைந்து கொண்டிருக்கிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவர அரசு முயர்சிப்பதின் விளைவாக கடன் பெறும் விவசாயிகள் மத்திய கூட்டுறவு வங்கியில் கணக்கு தொடங்க வேண்டும் என்ற சூழல் உள்ளது. இந்த முறையை முற்றிலும் நீக்கி பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டும். மத்திய அரசு வட மாநில விவசாயிகளுக்கு கோதுமை, கடுகு,

சோயாபீன்ஸ் போன்ற விலை பொருட்களுக்கு ரூபாய் கணக்கு ஆதரவு விலையை உயர்த்தி வழங்கிறது. ஆனால் தமிழகத்தில் விளையும் பொருட்களுக்கு பைசா வாரியாக உயர்த்தி தட்டிக்கழிக்கிறது. இதனால், வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்ந்து கொண்டிருக்கிறதோ என்று நினைக்கத்தோன்றுகிறது.. இதே நிலைமை தொடந்தால் ஒரு சில வருடங்களில் அனைத்து விவசாயிகளும், கார்பரேட் நிறுவனங்களில் கொத்தடிமைகளாக மாற வேண்டிய சூழ்நிலையை அரசே ஏற்படுத்துவது போலாகிவிடும். ஏற்கெனவே பலகோடி ரூபாயை விவசாயிகளிடம் காப்பீட்டு நிறுவனம் பெற்றுக்கொண்டு இழப்பீடுகளை ஏமாற்றி வருகிறது. தற்போது உயர்மின் கோபுரத்திற்காக நிலம் கொடுத்த விவசாயிகள் இழப்பீட்டுக்காக போராடுகிறார்கள். இப்படியிருக்கும் சூழலில், எரிவாயு குழாய் பதிக்க மத்திய அரசு முயல்கிறது. விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை நிலை நிறுத்த போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். விவசாயிகளுக்கு எந்த இழப்பீடும் கிடைக்காத சூழ்நிலை உள்ளது. விவசாயிகளின் வருமானம் இரட்டிபபாகும் என அரசு சொல்கிறது.  ஆனால்,அரசியல் வாதிகள் மற்றும் அதிகாரிகள் வருமானம் தான் இரட்டிப்பாகிறது என்பதுதான்  உண்மை நிலை. பன்னாட்டு நிறுவனங்களின் வரிச்சலுகை மற்றும் கடனை தள்ளுபடி செய்கிறது. கொரானாவால் உரிய விலை கிடைக்காததினால் கேட்ட விலைக்கு விலை பொருட்களை விற்றதால்  விவசாயிகள் மேலும் கடன் சுமையில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அனைத்து விவசாய கடன்களையும் பாரபட்சமில்லாமல் தள்ளுபடி செய்ய  வேண்டும் என்று தனது அறிக்கையில் கே.ஆர்.சுதந்திரராசு தெரிவித்துள்ளார்.

Top