logo
வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி  ஈரோட்டில் பாமக வினர்  மனு

வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி ஈரோட்டில் பாமக வினர் மனு

24/Dec/2020 06:49:51

ஈரோடு, டிச:வன்னியர்களுக்கு 20 சதவீத தனி உள் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டத்தில் உள்ள 363 கிராம நிர்வாக அலுவலகங்களில் மனு அளிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து வன்னியர்களுக்கு 20 சதவீத தனி உள் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி ஈரோடு மாநகராட்சியில் உள்ளமண்டல அலுவலகங்களிலும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள சித்தோடு நசியனூர் காஞ்சிகோவில் கருமாண்டி செல்லிபாளையம் சென்னிமலை மொடக்குறிச்சி பூந்துறை அரச்சலூர் உள்பட 22 பேரூராட்சி அலுவலகங்களிலும் மனு அளிக்கப்பட்டது.

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட  இரண்டாம் மண்டல அலுவலகத்தில் ஈரோடு மாநகர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின்  துணைப் பொதுச் செயலாளர் .பா.பரமேஸ்வரன் தலைமையில் உதவி ஆணையரிடம் மனு வழங்கப்பட்டது.

மாநகரச் செயலாளர் ராஜ் முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் பொ.வை.ஆறுமுகம், துணைச் செயலாளர்கள் பழனிசாமி, ரமேஷ், மாவட்ட செயலாளர்கள் பிரபு, ராசு அமைப்பு மாவட்ட செயலாளர் முருகன், மாநில துணை அமைப்பு செயலாளர் இந்து ராஜேந்திரன், இளைஞரணி மாநில துணைத்தலைவர் விக்னேஷ், மாணவரணிமுத்துக்குமார், ராஜ் சண்முகம், வெங்கடாசலம், மூர்த்தி, முனியப்பன் உட்பட பல்வேறு நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Top