logo
2020 – 2023  சனீஸ்வர பெயர்ச்சி... கால நேரமும் மற்றும் நாம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும்

2020 – 2023 சனீஸ்வர பெயர்ச்சி... கால நேரமும் மற்றும் நாம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும்

24/Dec/2020 07:08:01

புதுக்கோட்டை, டிச:  வருகிற    27.12.2020 ஞாயிறு அதிகாலை 5.22  மணி நிமிடத்திற்கு உத்திராடம் 1-ஆம் பாதம்  தனுசு ராசியில் இருந்து உத்திரம்  2 -ஆம் பாதம் மகரராசியில் ஸ்ரீசனீஸ்வர பகவான் பெயர்ச்சி ஆவதால் ஆஸ்திக மெய்யன்பர்கள்  அனைவரும்,ஸ்ரீசனீஸ்ரவ பெயர்ச்சி காலமும், நாம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும் அறியச்செய்யும்  எண்ணம் கொண்டு உங்களை இந்த இணைய தளம்  வாயிலாக சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 

காலமும் பொன்னானது. கடவுள் மெய்யானது என்ற  பெரும் தத்துவம் கொண்டு 12 ராசிக்காரர்களுக்கும் , சனீஸ்வர பகவான் பார்வையில் பலமும் ,பலகீனமும் மகர ராசியில் இருந்து ஏற்படும் விதத்தை மிகவும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன் ஸ்ரீசனீஸ்வர பெயர்ச்சி .பலன்கள் பற்றி புதுக்கோட்டை ஜோதிடர் சிவஸ்ரீ பாலாஸ்ரீ  ஈசாண  சிவாச்சாரியார்கூறியதாவது:

 2020 – 2023  சனீஸ்வர பெயர்ச்சியின் பலன்கள் :


1. மேஷம் : தேவையில்லா தடுமாற்றம் ஏற்படும் .நினைத்த காரியம் நிறைவேற சிறிது கால தடை ஏற்பட்ட பிறகுதான் காரியங்கள் நிறைவேறும் .ஸ்ரீமுருகன் ,துர்க்கை அம்மவழிபடும்போது மனதிற்கு அமைதிஏற்படும்.


2. ரிஷபம் : நினைத்த காரியம் நினைத்தபடி வெற்றிபெறும் .இனி எல்லாம் சுகமே என்ற அடிப்படையில்  பட்ட பாடுக்கு எல்லாம்  பலன் கிடைக்கும் நேரம் இது , எனது பேர் ,புகழ் , பொருளாதாரம் , சொந்தங்கள் , நண்பர்கள்  .இவை  அனைத்து இனி வருங்காலத்திற்குசேமியுங்கள் .  இறைவன் அள்ளிக் கொடுக்கும் காலம் இது .சுமங்கலி பெண்களுக்கு உணவு உபசரிப்பது .பிராமண போஜனம் செய்வது நிரந்தர நன்மையாகும்.

3. மிதுனம் :  அதிக செலவும் ,வீண் வருத்தமும் ஏற்படும் நாம் செய்யும்  செயல் அவசியமா , இல்லையா என அறியாமல் செலவு அதிகரிப்பது . இதனால் மனம் வீணாக வருத்தத்தை  உண்டு , பண்ணும்  எனவே மிக கவனம் தேவை .நண்பர்கள், பெரியவர்கள் அறிவுரைகளை கேட்பது பலன் தரும்,    மகாலட்சுமி தேவியை வழிபட வேண்டும். சுக்ரன் கிரகத்திற்கு அன்ன நிவேதனம் செய்வது நல்ல சூழ்நிலையை வகுத்துக் கொடுக்கும்.

4. கடகம் :  வீடு , வாகனம் ,தொழில் , பூர்வீக சொத்துக்கள் , நன்மையில் அமையும் பல நல்ல காரியங்கள்  நடப்பது  .      பூர்வீக சொத்துக்கள் கிடைப்பது .புது வீடு வாகனம் வாங்குவதும்  புதியதொழில் நல்லதாகவே அமையும். ஆலயங்கள் சென்று துர்க்கை அம்மனுக்கு பாசிப்பருப்பு பாயாசம் வைத்து வழிபட்டால் சந்தோஷம் பொங்கும்.

5.சிம்மம் : கவலைகளும் – மன உளைச்சலும் ஏற்படும்  குடும்பத்தில் பகை ஏற்படுவதும் , காரியங்கள் தடைபடுவதும் , மருத்துவச் செலவுகள் ஏற்படுவதும் , காலத்தின்  கட்டாயம் ஆகும். இதை புரிந்து கொண்டு  நடக்கும் போது  தற்காலம்  கடந்து  நல்லகாலம் அடையலாம் , சஷ்டி தின விரதம் இருப்பதும், முன்னோர்கள் திதி ,தர்ப்பணம் கொடுப்பதும் , நமக்கு விழிப்புணர்வும் ஏற்பட்டு மனம் அமைதிபெறும் .

6. கன்னி : இனி வீட்டில் விசேஷம்தான் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும் சுபகாரியங்கள் நடப்பதும், உறவுகள் சேர்ந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படுவதும் , நல்லகாலம் ஆகும். எல்லா நன்மைகளும் வீடு தேடி வரக்கூடிய மிக முக்கியதுவம் வாய்ந்த பொன்னான காலம் ஆகும் . திங்கள்தோறும் சிவபெருமானை வில்வத்தில்  வழிபடுவது ஸ்ரீகாலபைரவர் வழிபாடும். .குழந்தை பாக்கியம்  கிடைக்க பெற்று குடும்ப மகிழ்ச்சி நிலைபெறசெய்யும்..

 7. துலாம் :  வீடு , வேலை – சாதகமான சூழ்நிலைகள் மாற்றம் ஏற்படும் வேலை மாற்றம் , வீடு மாற்றம், பிடித்த வேலை கிடைக்காமல்  போவது, பிடிக்காத வேலை கிடைப்பது . நீதிமன்ற தீர்ப்புகள் பாதகமாக அமைவது . இல்ல நண்பர்கள் உங்களை சுற்றி இருப்பது எண்ணங்கள் அடிக்கடி மாறுபட்டு மனவலி ஏற்படலாம் . வீட்டில் தெய்வங்களை வழிபடுங்கள்.தெரியாதவர்களிடம் கவனமாக இருங்கள் . வெள்ளிக்கிழமை தோறும் அம்மன் ,ராகுதெய்வங்களை தீபம் ஏற்றி வழிபட கால சூழ்நிலை அறிந்து மன வலி வேதனை தவிர்க்கலாம்.


8. விருச்சிகம் : வரும் காலம் வசந்த காலமே பொன்னும் பொருளும் சேரும் நேரம் தெய்வங்களும் , தேவைகளும் வீடு தேடி வரும் வசந்தகாலம் கடந்தகால அனுபவத்தை மனதில் வைத்துக் கொண்டு பிறவி பயன் அடையும்  வழியை தேர்ந்து எடுங்கள் . உங்கள் வாழ்வில் இனி எல்லாம் சுகமே , நவகிரஹ திரவ்ய உபசாரங்கள் செய்து வழிபடுங்கள் . வாழ்வில் உயர்வு காட்டும் .

9. தனுசு : சுப விரயங்கள் ஏற்படும் மற்றவர்கள் உதவி கிடைப்பது கஷ்டம்தான் .ஆனால் தெய்வமே துணையாக நிற்கும் காலம் இது .உங்கள் தேவைகள் பூர்த்தி ஆகும் . வரவு ,செலவுக்கு ஏற்ப செலவாக காலம் இருக்கும் கவலை வேண்டாம் . படிக்கும் ஏழ்மையான குழந்தைகளுக்கு கஷ்டம் பாராமல் உதவி  செய்யுங்கள் . ஞாயிறுதோறும் , சூரியன் ,பைரவர்  ஆகிய தெய்வங்களை  வழிபட குடும்பத்தில் நிம்மதி  ஏற்படும் .

 10 . மகரம் : நிம்மதி ல்லாத நிலைப்பாடு ஏற்படும் வாழ்வின் பயம் , பயணத்தின்போது கவனம் , பக்குவம் இல்லாத வார்த்தைகள் . பல வழிகளில் நிம்மதி குறைவு ஏற்பட வாய்ப்பாக அமையும். இந்த காலத்தில் , உலகம் ,உறவுகள் , பணம் ,பேர்,புகழ்,நன்றி ,பிறப்பு , இறப்பு என் அத்தனையும் இறைவன் உங்களுக்கு புரியவைப்பான் கவனமாக இருங்கள் . இந்த நிலையும் மாறும் . காத்திருங்கள் , வீட்டில் ஆயுஷ்ஹோமம் செய்யுங்கள் . ஆலயத்தில் அன்னதானம் செய்யுங்கள் , புத்தகங்களை நண்பனாக்குங்கள். சனிக்கிழமை தோறும் விநாயகப் பெருமான் ,சிவன் ,சனீஸ்வரனை வழிபடுங்கள் .இராமேஸ்வரம் குடும்பத்தோடு சென்று குளித்து  தான தர்மம் செய்யுங்கள் .எல்லாம் நன்மை அமையும்வண்ணம்   மாறும்.

11 . கும்பம் : குழப்ப நிலையும் கோப நிலையும் ஏற்படும் நம்பும்படி நடப்பவர்கள் உண்மை இல்லாதவர்களாக மாறிவிடுகிறார்கள் . புரிந்து கொண்டு துணையாக  இருக்க வேண்டியவர்கள் இருக்க மாட்டார்கள் . எந்த முடிவும் முழுமை பெற மிக கடினமான காலம் தேவைப்படும் . நிதானம், பொறுமை ,மிக கவனம். இவைக் கொண்டுதான் தாங்கள் இந்த காலத்தை கடந்து செல்ல  முடியும். ஆழ்நிலை தியானம் , பெரிய மகான்கள் ,ரிஷிகள் , முனிகள் ,சித்தர்கள்  இவர்கள் எண்ணங்களை தெரிந்து பின்பற்றுங்கள் . குழப்ப நிலை மாறும்.கோபம் அமைதியாகும். சனி, ராகு, கேது கிரகங்களை வழிபடுங்கள்.முன்னோர்கள் திதி தர்ப்பணங்களை சரியான நேரத்தில் செய்யுங்கள் . மகிழ்ச்சியாக மாறும் காலம் அமையும்.                                                                                                                                                                                                        12., மீனம் : தடைகள் நீங்கி  வெற்றி பெறும் நேரம் இது மனதில் நிம்மதியும் , குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஏற்படும். மருத்துவ செலவுகள் குறைந்து உடல்நலம் ஏற்படும்.குலதெய்வம் துணை பெற்று துயர் நீங்கும் நேரம். சேமிப்பும் , குடும்ப உறவுகள் கவனமாக எதிர்கொள்ளும் நேரம் . பணிச்சுமையும் , மனச்சுமையும் மாறும் காலமிது  வியாழன் தோறும் குரு ,செவ்வய்,சந்திரன்,கிரகங்களை  வழிபட பல தடைகள் காணாமல் போகும்.                                                                                                                                   எனவே ஆஸ்திக மெய்யன்பர்கள் அனைவரும் , ஸ்ரீ சனீஸ்வரபகவான் அருள்பெற ஏதுவாக ,சனீஸ்வர பார்வை பலனை மிகவும் எளிமையாக தெரிவித்து இருக்கிறேன் .நீங்கள் அனைவரும் தாங்கள் வாழ்வில் சரியான தகவல் கொண்டு கவனமாக வாழ வேண்டும் என்பதே என் தாழ்மையான கருத்தாகும் .

 எனவே நல்லதும் தீயதும் நம்மை சுற்றியும், நாம் அறியாமலும்  வரலாம்.  தாங்கள்   அனைவரும் ,சனிப் பெயர்ச்சி என்பது எந்த வகையில் நம் வாழ்க்கை உதவும் என்பதை அறிந்து, குழப்பம் ,வருத்தம், வேதனை இவைகளை கடந்து தெய்வ நம்பிக்கையுடன்  தாங்கள் அனைவரும் பேரானந்த பெருவாழ்வு பெற்று வாழவேண்டும் என் எம்பெருமானை வேண்டி பிரார்த்திக்கிறேன் என்றார் ஸ்ரீதண்டாயுதபாணி  துணைக்கொண்டு நீதி சாஸ்தீர  வல்லுநர் காலபைரவ உபாசகர் ஜோதிட  பூஷணம் சிவ ஸ்ரீபாலா ஸ்ரீ ஈசாண  சிவாச்சாரியார்   தெற்கு 4 -ஆம் வீதி , புதுக்கோட்டை . 97878 27049 .                     


Top