logo
ஈரோடு மாநகரில் 2 இடங்களில் அம்மா மினி கிளினிக்குகள்: அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்

ஈரோடு மாநகரில் 2 இடங்களில் அம்மா மினி கிளினிக்குகள்: அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்

22/Dec/2020 10:31:48

ஈரோடு, டிச: ஈரோடு  மாநகராட்சியில்  2 இடங்களில் அம்மா மினி கிளினிக்குகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் திறந்து வைத்தார்.

ஈரோடு மாநகராட்சி பகுதியில் சூளையில் நடைபெர்ற  அம்மா மினி கிளினிக் திறப்பு விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன்  தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் கே.வி. ராமலிங்கம் , கே. எஸ்.தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய  அம்மாமினி கிளினிக்கை திறந்து வைத்தார். 

மாநகராட்சி  ஆணையர் மா. இளங்கோவன், ஈரோடு மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள், பகுதி செயலாளர்கள்  ஜெகதீசன்,  கேசவமூர்த்தி, தங்கமுத்து, ராமசாமி, ஜெயராஜ், கோவிந்தன்,மாணவரணி மாவட்ட செயலாளர் ரத்தன் பிரித்வி,  இணைச்செயலாளர் யுனிவர்செல் நந்தகோபால், ஜெயலிதா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் வீரக்குமார்,  உட்பட பலர் கலந்து கொண்டனர். 

இதை தொடர்ந்து வீரப்பன்சத்திரம் நகராட்சி அலுவலக வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மினி கிளினிக்கை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். தொடர்ந்து பெரிய வலசில் உள்ள நடுநிலைப்பள்ளியில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 58 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட 6 புதிய வகுப்பறைகள் கட்டிடத்தை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். இதேபோல் ராஜாஜி புரம் பகுதியில் ரூ. 8 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடையையும்திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து, திண்டல் வேளாளர் கல்லூரியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் சி. கதிரரவன் தலைமையில் நடைபெற்ற  ஈரோடு நாமக்கல் திருப்பூர் கோவை நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த நர்சரி பிரைமரி அரசு உதவி பெறும் சுயநிதி தொடக்கப் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் நிகழ்ச்சிக்கு  எம்.எல்.ஏ.க்கள் கே.வி. ராமலிங்கம், கே.எஸ் .தென்னரசு, தோப்பு வெங்கடாசலம், ராதாகிருஷ்ணன். ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 288 பள்ளிகளுக்கு அங்கீகாரம் ஆணையை வழங்கினர்.

Top