logo
பேரூராட்சிகளில் பணிபுரியும் கணினி இயக்குபவர்களை நிரந்தரப்படுத்த வேண்டும்

பேரூராட்சிகளில் பணிபுரியும் கணினி இயக்குபவர்களை நிரந்தரப்படுத்த வேண்டும்

20/Dec/2020 10:29:29

மதுரை: மதுரையில் நடைபெற்ற பேரூராட்சி பணியாளர் சங்க இணைப்பு விழாவில் இந்தக் கோரிக்கை உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

இக் கூட்டத்துக்கு, தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர் சங்கத் தலைவர் பி.கே. சிவக்குமார் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் இரா. பிச்சை முத்து, பொதுச் செயலாளர் இரா. கோபிநாத், மாநில நிர்வாகி பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்டத் தலைவர்  த. பரமசிவம் வரவேற்றார். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் சிறப்புத் தலைவர் கு. பாலசுப்ரமணியன், பேரூராட்சி பணியாளர் சங்கத்தை முறைப்படி அரசு பணியாளர் சங்கத்துடன் இணைத்து வைத்து சிறப்புரையாற்றினார்.

அவர் பேசியது: அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை அரசிடம் போராடி பெற்றுத் தருகிறோம்.மேலும், தொகுப்பூதிய ஊழியர்களை காலமுறை ஊதியத்துக்கு மாற்றி தந்துள்ளோம் என்றார்.மாநில நிர்வாகி முனியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.பேரூராட்சி பணியாளர் சங்க மாவட்டச் செயலர் இரா. ஆறுமுகம் நன்றி கூறினார்.


Top