logo
இன்றைய பயனுள்ள தகவல்... குழந்தைகளை துரத்தும் துாரப்பார்வை

இன்றைய பயனுள்ள தகவல்... குழந்தைகளை துரத்தும் துாரப்பார்வை

18/Dec/2020 07:16:18

குழந்தைகள் நீண்ட நேரம் ஆன்லைன் வகுப்பில் இருப்பதாலும், அலைபேசி விளையாட்டு, வீடியோக் களை பாப்பதாலும் கண்கள் பாதிக்கும். தூரப் பார்வைக்கான வாய்ப்பு அதிகம். வீட்டில் இருந்து பணிபுரியும் இளைஞர்கள் வழக்கமான அலுவலக நேரத்தை விட சற்று கூடுதலாகவே கணினியில் செலவிட வேண்டியுள்ளது. 

இன்னொருபுறம் முழு ஊரடங்கு காலத்தில் நீண்ட நேரம் அலைபேசியை பயன்படுத்த துவங்கிய பலரும் அதை தொடர்கின்ற வர். இதனால் கண்கள் உலர்ந்து போகும். கண்ணீர் பொங்கும். ஒரு கட்டத்தில் கண்களை திறந்து, மூடுவதில் சிரமம் நேரும். இது தொடர்ந்தால் கருவிழியில் பிரச்னை உருவாகி புண்ணாகும். 

கணினி அலைபேசியை இடைவிடாது உற்று பார்ப்பதாலும் இரவில் நீண்ட நேரம் பயன்படுத்துவதாலும் தாங்க முடியாத ஒற்றை தலைவலி வரலாம். பணி ஆன்லைன் வகுப்பு நிமித்தமாக அலைபேசி, கணினியை பயன்படுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால், 15 நிமிடத்திற்கு ஒரு முறை 5 நிமிட இடைவெளி விட வேண்டும். கணினி, அலைபேசியை விட்டு வெளியே வந்து மனதை ஒருமுகப்படுத்தி சீரான இடைவெளியில் தொடர்ந்து கண் களை மூடி, திறக்க வேண்டும். இப்படி செய்வதனால் கண் உலர்வதை தவிர்க்கலாம்

 டாக்டர் உஷாகிம், கண் நல மருத்துவர், அரவிந்த் கண் மருத்துவமனை, மதுரை

Top