logo
முகக்கவசத்தின முக்கியத்துவத்தை உணர்த்தவே மக்களுக்கு அபராதம் விதிக்கப்டுகிறது.   சுகாதாரத்துறை அமைச்சர்  டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேட்டி

முகக்கவசத்தின முக்கியத்துவத்தை உணர்த்தவே மக்களுக்கு அபராதம் விதிக்கப்டுகிறது. சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேட்டி

21/Sep/2020 04:51:28

 புதுக்கோட்டை மாவட்டம், பரம்பூரில் மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தலைமையில் (21.9.2020)திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பங்கேற்று 108 அவசர சிகிச்சைக்கான புதிய  ஊர்தி சேவையினை தொடக்கி வைத்து செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது.

பொது மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக மட்டுமே தமிழக அரசு பல்வேறு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நமது அண்டை மாநிலங்களில் தற்போது  கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவித்து 3 வாரங்கள் கடந்து விட்டது. எனவே பொது மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

பொது மக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை தவறாமல் கடைப்பிடிக்க  வேண்டும். பொதுவாக ஒருநபருக்கு கொரோனா தொற்று ஏற்படும்போது, காய்ச்சல், இருமல், சளி, உடல்சோர்வு, வாந்தி, வாசனை இழப்பு போன்ற ஏதாவது ஒரு அறிகுறி தென்படும். அப்படி அறிகுறிகள்  ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனையை அணுகி மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பது அவசியமாகும். இதன் மூலம் நுரையீரல் பாதிப்பு தவிர்க்கப்பட்டு கடைசி நேரத்தில் ஏற்படும் அபாயகட்ட பாதிப்புகளையும் தவிர்க்க முடியும்.

தாமதமாக சிகிச்சைக்கு வருவதால்தான் நோயாளிகளின் உயிரைக் காப்பதில் மருத்துவர்களுக்கு மிகப் பெரிய சவாலாக மாறிவிடுகிறது. எனவே பொது மக்கள் நோய் அறிகுறி தென்பட்டவுடன் தாமதமின்றி மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் செல்ல வேண்டும்.

 மருத்துவர்கள், செவிலியர்கள் முழுக்கவச உடையணிந்து கொரோனா பாதிப்பிலிருந்து பொது மக்களை பாதுகாக்கப்  போராடி வருகின்றனா;. எனவே, பொது மக்கள்  நோயின் தீவிர பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணியாதவர்களுக்கு முகக்கவசம் அணிவதன் அவசியத்தை உணா;த்துவதற்காக மட்டுமே அபராதம் விதிக்கப்படுகிறது.  அரசு கூறும் வழிமுறைகளை பொது மக்கள் அனைவரும் தவறாது பின்பற்ற வேண்டும் என்றார் அமைச்சர் சி. விஜயபாஸ்கர்.


Top