logo
மாசம் மூணு மழை அந்த காலம், வாரம் மூணு புயல் இந்த காலம்...

மாசம் மூணு மழை அந்த காலம், வாரம் மூணு புயல் இந்த காலம்...

07/Dec/2020 11:07:08

வங்கக் கடலில் நாளை(டிச.8) மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிவர் புயல் கடந்த வாரம் தாக்கிய நிலையில், புரெவி புயல் தற்போது தாக்கிக் கொண்டிருக்கும் நிலையில், தென் கிழக்கு வங்க கடல் பகுதி அதனை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை காலை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மீண்டும் மீண்டும் புதிய புயல்:

மாதம் மும்மாரி பொழிந்த நாட்டில் தற்போது வாரத்துக்கு மூன்று புயல்கள் அடித்து மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்து வருகின்றன. நவம்பர் இறுதியில் வங்கக் கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரி, மரக்காணம் இடையே கரையைக் கடந்தது. இதனால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. கால்நடைகள் பலியாகின, வீடுகள் தரை மட்டமாகின, உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இருப்பினும் கஜா புயல் போன்று பெரியளவிலான சேதத்தை ஏற்படுத்த வில்லை. நிவர் புயலால் டெல்டா மற்றும் வட மாவட்டங்கள் முழுவதும் கனமழை பெய்தது.

நிவர், புரெவி..அடுத்து என்ன: 

நிவர் புயல் கரையைக் கடந்த சில தினங்களில் வங்கக் கடலில் மற்றொரு புயல் உருவானது. புரெவி எனப் பெயரிடப்பட்ட அந்த புயல் இலங்கையில் கரையைக் கடந்தது. அப்போது வீசிய சூறாவளிக் காற்றால் தென் இலங்கையில் பல இடங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. அப்புயல் தற்போது தென் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இதனால் தென் மாவட்டங்கள் உஷார் நிலையில் உள்ளன. பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. புயல் காரணமாக சென்னையில் மழை கொட்டித் தீர்த்துவிட்டது.

உருவாகுமா புதிய புயல்:

புரேவி புயல் தமிழகத்தில் கரையைக் கடக்கும் முன் மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தென் கிழக்கு வங்க கடல் பகுதி அதனை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை (டிசம்பர் 8) காலை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் கடந்த மூன்று மாதங்களில் தற்போது வரை மூன்று புயல்கள் உருவாகியுள்ளன. இந்நிலையில் நாளை மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல்கள் உருவாகி மக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதித்து வருவதுடன், பல இடங்களில் மக்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்படுகிறது. இத்தனை புயல் அடித்தும், மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்தும் வட கிழக்கு பருவமழை இயல்பான அளவைவிட குறைவாகவே பதிவாகியுள்ளதாக கூறுகின்றனர்.

அடுத்தடுத்த புயல்கள் - என்ன காரணம்:

அடுத்தடுத்த புயல்கள், பெரு வெள்ளம் எல்லாம் இயற்கை நமக்கு அடிக்கும் எச்சரிக்கை மணி என்கின்றனர் சூழலலியளார்கள். புயல்கள் ஏன் அடிக்கடி வருகின்றன, இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சார்ந்த சுந்தர்ராஜன் விளக்கியுள்ளார். தமிழகம் கடந்த ஆறு ஆண்டுகளில் தானே, ஒகி, கஜா, வர்தா, நிவர் என்று வரிசையாக புயல்களை சந்தித்து வருகிறது. தற்போது புயலின் தன்மையும் தீவிரமடைந்து வருகிறது. இதற்கு காலநிலை மாற்றமே காரணம் என்று கூறியுள்ளார்.

காத்திருக்கும் அழிவுகள்:

மேலும் அவர், மனிதர்கள் வெளியிடக்கூடிய கார்பனை பெருங்கடல்கள் வாங்கிக் கொள்கின்றன. அப்போது கடலின் வெப்பநிலை அதிகரித்துக்கொண்டே உள்ளது. கடலின் வெப்பம் 26 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கவேண்டும். ஆனால் இங்கு 29, 30 டிகிரி செல்சியஸ் இருக்கிறது. இது புயல் உருவாக முக்கிய காரணமாக உள்ளது. இதன் மூலம் காலநிலை மாற்றங்கள் மனிதர்களுக்கு மிகப்பெரிய அழிவுகளை, சவால்களை உருவாக்கி வருகின்றன.

முன்பு வங்காள விரிகுடா, இந்திய பெருங்கடலில் தான் அதிக வெப்பம் ஏற்பட்டு வந்தது. தற்போது அரபிக் கடலின் வெப்பமும் அதிகரித்துள்ளது. இதனால்தான் கேரளாவிலும் அதிகமாக வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படுகிறது எனக் கூறியுள்ளார்.

டிசம்பர் 8 -ஆம் தேதி  புயல் வரலாம் Tauktao என்று பெயர்.டிசம்பர் 17 -ஆம்  தேதி புயல்வரலாம்.  Yaas என்று பெயர். டிசம்பர் 24- ஆம் தேதி புயல் வரலாம் Gulabஎன்று பெயர்.ஜனவரி -1 ஆம் தேதி ஒரு  புயல் வரலாம். Shaheen என்று பெயர்.ஜனவரி 8 -ஆம் தேதி ஒருபுயல் வரலாம் Jawad என்று பெயர்.வானிலை நிலையம்அறிவிப்பு.


Top