logo
மூளைச்சாவு அடைந்தவரின் சிறுநீரகம் 67வயது முதியவருக்கு பொருத்திய ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனை

மூளைச்சாவு அடைந்தவரின் சிறுநீரகம் 67வயது முதியவருக்கு பொருத்திய ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனை

06/Dec/2020 08:53:23

ஈரோடு, டிச: மூளைச்சாவு அடைந்தவரின் சிறுநீரகம், 67வயது முதியவருக்கு வெற்றிகரமாக பொருத்தி, ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.

ஈரோடு பெருந்துறை ரோட்டில் அபிராமி கிட்னி கேர் மற்றும் டாக்டர் தங்கவேலு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு அரசின் அங்கீகாரம் பெற்ற முதல் மருத்துவமனையாகவும் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் சிறுநீரக தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு அதிநவீன சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு தமிழ்நாடு உடல் உறுப்பு தானம் பெறும் அமைப்பு மூலம் சிறுநீரகம் தானமாக பெற்று நோயாளிகளுக்கு பொருத்தி வருகிறது.

இதில், நேற்று முன்தினம் மதுரையில் மூளைச்சாவு அடைந்தவரின் சிறுநீரகத்தை உடல் உறுப்பு தானம் பெறும் அமைப்பு மூலம் பெற்று, ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் சிறுநீரக செயலிழப்பு நோயால் பாதிக்கப்பட்ட 67வயது முதியவருக்கு, அம்மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சரவணன் தலைமையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு வெற்றிகரமாக பொருத்தி சாதனை படைத்தனர். இது இந்த மருத்துவமனையில் ஒரு மாத இடைவெளியில் 2வது முறையாக மேற்கொள்ளப்பட்ட சிறுநீகரக மாற்று அறுவை சிகிச்சையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சரவணன் கூறியதாவது:

மதுரையில் மூளைச்சாவு அடைந்த 61வயது ஆண் நபரின், சிறுநீரகத்தை தமிழ்நாடு உடல் உறுப்பு தானம் பெறும் அமைப்பு மூலம் பெறப்பட்டு, மதுரையில் இருந்து இரண்டரை மணி நேரத்தில் ஈரோட்டிற்கு ஆம்புலன்சு மூலம் நேற்று(நேற்று முன்தினம்) கொண்டு வரப்பட்டு, எங்களது அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் சிறுநீரக செயலிழப்பு நோயால் பாதிக்கப்பட்ட, 67வயது ஆண் நோயாளிக்கு, எனது தலைமையில் மருத்துவ குழுவினர் முன்னிலையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து பொருத்தப்பட்டுள்ளது.

 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை 50 வயதுக்கு உள்பட்டவர்கள் தான் மேற்கொள்ள வேண்டும் என்ற பொதுவான கருத்தும், எண்ணம் அனைவரிடம் உள்ளது. அதை மாற்றும் வகையில் தற்போது 67வயது ஆண் ஒருவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு நோயாளி மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் ஒத்துழைப்பு இருந்ததால் இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்ய முடிந்தது. மேலும், இந்த அறுவை சிகிச்சை சிறுநீரக தானம், உடல் உறுப்பு தானத்திற்கும், எந்த வயதிலும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம் என்பதற்கு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வாக அமைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Top