logo
முகக்கவசம்  அணிந்து மாசில்லா தீபாவளி கொண்டாடுவோம்

முகக்கவசம் அணிந்து மாசில்லா தீபாவளி கொண்டாடுவோம்

09/Nov/2020 10:43:06

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம், இணைந்து சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க தலைவர் டாக்டர் கே. ஆறுமுகம் தலைமையில் முகக்கவசம்  அணிந்து மாசில்லா தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது.

முன்னதாக வருகை தந்த அனைவரையும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க தலைவர்ரோட்டேரியன் மாருதி கண. மோகன்ராஜா வரவேற்றார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் சோ.விஜய மாணிக்கம், சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க நிர்வாகிகள் ஜெயக்குமார், திருப்பதி, ஏ.சுப்பையா, புதுகை புதல்வன், பீர்முகம்மது சிட்டி ரோட்டரி சங்க செயலாளர் செல்லத்துரை, உறுப்பினர்கள் செல்வரெத்தினம், யோகேஸ்வரன் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், வருகின்ற தீபாவளி திருநாளில் எப்படி எல்லாம் பாதுகாப்பாக பட்டாசு கையாள்வது என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியினை செயல்முறை பயிற்சியாக அளிக்கப்பட்டது.  அரசு வழிகாட்டுதலின்படி அனைவரும் முகக்கவசம் அணிந்து நடத்தப்பட்டது. நிறைவாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க செயலாளர் ஏ.ஆரோக்கியசாமி நன்றி கூறினார்

Top