logo
 முதுகுளத்தூர் பகுதியில் கடத்தல் மணல் விற்பனை: போலீசார் உதவி செய்வதாக பொதுமக்கள் புகார்

முதுகுளத்தூர் பகுதியில் கடத்தல் மணல் விற்பனை: போலீசார் உதவி செய்வதாக பொதுமக்கள் புகார்

29/Nov/2020 04:25:28

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரங்களில் மணல் கடத்தல்  வெட்ட வெளிச்சமாக  நடைபெறுகிறது. தடுக்க வேண்டிய காவல்துறையினரோ மணல் கடத்துபவருக்கு துணைபுரிவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இரவு 2 மணிக்கு மேல் காலை 5 மணி வரை செல்வநாயகபுரம் பகுதியிலிருந்து கடத்தி வரும் மணல் வண்டிகள் தனியார் கல்லூரி, திடல் ஊரணி வழியாகவும், தேரிருவேலி பகுதியில் இருந்து வரும் வண்டிகள் அரசு கல்லூரி,கிழக்கு தெரு, திடல் ஊரணி வழியாகவும், கமுதி ரோட்டில் இருந்து வரும் வண்டிகள் தனியார் பெட்ரோல் பங்க், சங்கரபாண்டியன் ஊரணி வழியாகவும் இரவு நேரங்களில் இரவு நேர காவலர்கள் துணையுடன் திருட்டு மணல் கடத்துவோர் கண்காணிப்பு கேமராக்களையும் தாண்டி சர்வசாதாரணமாக முதுகுளத்தூர் டவுனுக்குள்ளேயே மணல் விற்பனை செய்து வருகின்றனர்.


விவசாய காலம் என்பதால் மணலுக்கு இரட்டிப்பு தொகையாக கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர். பாவம் இதையெல்லாம் அறியாத துணை கண்காணிப்பாளரோ, உரிய அனுமதியுடன் எம்.

 சாண்டல் கொண்டுவரும் சிலரிடம், இன்ஸ்சூரன்ஸ் இருக்கா? லைசன்ஸ் இருக்கா? என கண்டிப்புடன் நடந்து கொள்வது பொதுமக்கள் மத்தியில் நகைப்பை உருவாக்கி வருகிறது.

மேற்கண்ட வழித்தடங்களில், கண்காணிப்பு காமேராவோ அல்லது சரியான இரவு நேர காவலர்களை நியமித்து மணல் கடத்தலை தடுத்து நீர்நிலையினையும், விவசாயத்தையும் காத்திட மாவட்ட கண்காணிப்பாளர்தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



Top