logo
வியாபாரிகளிடம்  நெல் கொள்முதல் செய்ய துணை போகும்   அதிகாரிகள் மீது நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

வியாபாரிகளிடம் நெல் கொள்முதல் செய்ய துணை போகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

06/Dec/2020 08:21:51

ஈரோடு-டிச:வியாபாரிகள்  நெல் கொள்முதல் செய்ய துணை போகும் அதிகாரிகள் மீது  நடவடிக்கை எடுக்கப்படும்.. அவ்வாறு வியாபாரிகள் கொண்டுவரும் நெல் மூட்டைகளை பறிமுதல் செய்ய  மாவட்ட ஆட்சியர் உரிய  நடவடிக்கை எடுப்பார் என்றார் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் செல்லும் தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை ஆகிய இரு பாசன வாய்க்கால்களில் முதல்போக சாகுபடியில் தற்போது அறுவடை தொடங்கியுள்ள நிலையில் புல்லப்பநாய்கன்பாளையம் கள்ளிப்பட்டி நஞ்சைப்புளியம்பட்டி கூகலூர் புத்துக்கரைப்புதூர் உட்பட  5 -க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழக அரசின் சார்பில் நெல்கொள்முதல் நிலையங்களளைபள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் ஆகியோர்  திறந்து வைத்தனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் மேலும் கூறி்யதாவது: ஈரோடு மாவட்டத்தில் 22 தற்காலி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கை ஏற்று கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 90 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய நிர்ணயிக்கட்டுள்ளது. விவசாயிகளின் வாழ்வாதரத்தை உயர்த்தவும் நியாமான விலை கிடைக்கவும் அரசே நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

ஆத்தூரில் 1,850 கோடி மதிப்பில் கால் நடை பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது, பணிகள் விரைவாக நடைபெற்றுவருகிறது. முதல்வர் பொறுப்பேற்றதற்கு பிறகு டெல்டா விவசயிகளுக்காக வேளாண் சிறப்பு மண்டலம் அமைக்கப்பட்டுள்ளது. முழுவதும் விவசாயிகளுக்கான அரசாக தமிழக அரசு உள்ளது. கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகள் நெல் கொள்முதல் செய்வதை தடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.

 நெல் கொள்முதல் செய்யும் விவசாயிகளிடம் யாராவது கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை  எடுக்கப்படும். மழை காலங்களில் நெல்களை சேமிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வியாபாரிகள் கொண்டுவரும் நெல்லை அதிகாரிகள்  விற்பனை செய்ய துணை போனால் மாவட்ட ஆட்சியர் உரிய  நடவடிக்கை எடுப்பார். அவ்வாறு வியாபாரிகள் கொண்டுவரும் நெல்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.

 முன்னதாக, தடப்பள்ளி,  அரக்கன்கோட்டை பாசனப் பகுதிகளில்  நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து வைத்தபின்  விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது தற்போது மழை காலம் என்பதால் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டுவரப்படும் நெல்லை உரிய முறையில் பாதுகாத்து கொள்முதல் செய்யவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.  அதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் உறுதியளித்தார். 

 இதில், கோட்டாட்சியர் ஜெயராமன் தாசில்தார் தியாகராஜு, வாணிபப்கழக அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Top