logo
தமிழகத்தில்  (பாசஞ்சர்) பயணிகள் ரயில்கள் இயக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்: தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் தகவல்.

தமிழகத்தில் (பாசஞ்சர்) பயணிகள் ரயில்கள் இயக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்: தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் தகவல்.

03/Feb/2021 04:45:00


ஈரோடு பிப்:தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் ஈரோடு ரயில் நிலைய 3-ஆவது நடைமேடையில்  அமைக்கப்பட்டுள்ள பயணிகள் காத்திருப்பு அறை, முன்பதிவு மையம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்  அதன்பின்பு  ஈரோடு ரயில் நிலைய வளாகத்தில் முன்புறம் அமைக்கப்பட்டுள்ள ரயில் மாதிரியை பார்வையிட்ட அவர் சரக்கு ரயில் பெட்டிகளை பிரிக்கும் வகையில் புதிதாக வடிவமைக்கப்பட்ட எலக்ட்ரிக் ரயில் இன்ஜினை கொடியசைத்து  துவக்கி  வைத்தார்.

 ஆய்வின்போது  சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஸ்ரீனிவாஸ் உட்பட ரயில்வே அலுவலர்கள் இருந்தனர். இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ், ஆண்டு தோறும் ரயில் நிலையங்களில் ஆய்வு செய்வது வழக்கம் அதுபோல்  தற்போதும் ஈரோட்டில்  ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதன்கிழமை காலை தொடங்கிய ஆய்வு மாலையில்   திருச்சியில்  நிறைவடைகிறது  ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் ஆய்வு செய்யப்பட்டு மூன்று மாதத்திற்குள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

  தமிழகத்தில் கொரானா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது. எனவே, மத்திய ரயில்வே துறை மற்றும் சுகாதார துறையிடம் அனுமதி பெற்று விரைவில்  (பாசஞ்சர்) பயணிகள் ரயில்கள் இயக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் ரயில்களில் பொதுப் பெட்டிகள் விரைவில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

Top