logo
புதுக்கோட்டை  வெண்ணாவால்குடி  பகுதியில் 30 ஏக்கரில் பயிரிடப்பட்ட மக்காளச்சோளம் சேதம்

புதுக்கோட்டை வெண்ணாவால்குடி பகுதியில் 30 ஏக்கரில் பயிரிடப்பட்ட மக்காளச்சோளம் சேதம்

05/Dec/2020 07:33:07

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், வெண்ணாவல்குடி பகுதியில் 30 ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த மக்காச்சோளப் பயிர்கள் கடந்த 3 நாட்களாக பெய்த மழையில் சாய்ந்து முளைக்கத் தொடங்கி உள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வெண்ணாவால்குடி விவசாயிகள் 30 ஏக்கருக்கு மேல் சோளம் பயிரிட்டு விவசாயம் செய்து வந்தனர் பல பெயர்களில் படைப்புழு தாக்குதலிலிருந்து அதிக செலவு செய்து பயிர்களை காப்பாற்றி வந்த நிலையில் தற்போது அறுவடைக்கு தயாராக இருந்தன.

புரெவி புயல் காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கிய நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்திலும் பலத்த காற்றுடன் கன மழை வெளுத்து வாங்கியது. இந்த கனமழையால் வெண்ணாவால்குடி பகுதியில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள பயிர்கள் சாய்ந்த நிலையில் தொடர் மழை பெய்ததால் பயிர்களிலிருந்து சோளக் கதிர்களை அறுவடை செய்யும் பணி மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் தவித்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது மழையால் சாய்ந்த சோளப் பயிர்கள் அனைத்தும் முளைக்கத் தொடங்கியதுஇதனைக் கண்ட விவசாயிகள் அதிர்ச்சி அடைந்ததோடு பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 1-ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாய அமைப்பினர் மற்றும் விவசாயிகளுடன் காணொளிக்காட்சி குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.

இதில் மூன்றாம் பருவ சோளப் பயிர்களுக்கு    பயிர் காப்பீடு செய்ய அறிவுறுத்தப்பட்ட நிலையில் பெரும்பாலான விவசாயிகளுக்கு இந்த தகவல் சென்று சேராததால் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய முடியவில்லை என்று கூறப்படுகிறது.மேலும் வேளாண் துறை அதிகாரிகள் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள பகுதிக்கு வந்து பார்வையிட்டு தங்களுக்கு ஏதேனும் நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Top