logo
அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய மருத்துவர்கள், செவிலியர்களுக்கு  அரசு உரிய கௌரவம் வழங்கும்-    தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தகவல்.

அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய மருத்துவர்கள், செவிலியர்களுக்கு அரசு உரிய கௌரவம் வழங்கும்- தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தகவல்.

20/Sep/2020 09:53:24

கொரோனா காலத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட அனைத்து ஊழியர்களுக்கும் உரிய கௌரவம் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்றார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர்.

புதுக்கோட்டை பழைய அரசு தலைமை மருத்துவனையில் உள்ள 108 கால் சென்டரில் மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்வில் பங்கேற்று,  ஊழியர்கள் 19  பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய அமைச்சர் சி. விஜயபாஸ்கர்  மேலும் கூறியதாவது:

பொதுமக்கள் விபத்து, பிரசவம் போன்ற அவசர காலங்களில் 108 அவசர சிகிச்சை ஊர்தியினை பயன்படுத்தி வருகின்றனர். 108  சேவைக்கான கால் சென்டர் சென்னையில் இயங்கி வருகிறது. இந்நிலையில் சென்னைக்கு அடுத்தபடியாக புதுக்கோட்டையில் 108 கால் சென்டர் சேவை விரைவில் தொடங்கப்படும். 

 தமிழகத்தில் கொரோனா தொற்று காலத்திலும் 108 அவசர சிகிச்சை ஊர்தி பொதுமக்களின் உயிர்காக்கும் வகையில் சிறப்பான சேவையாற்றி வருகிறது. தமிழகம் முழுவதும் 1,005 எண்ணிக்கையிலான 108 அவசர சிகிச்சை ஊர்தி செயல்பட்டு வருகினறது. நோய்தொற்று காலத்தில்  இந்த  ஊர்தி சேவையின் அவசியத்தை கருத்தில் கொண்டு ரூ.103.50 கோடி மதிப்பீட்டில் 500 புதிய  ஊர்திகளை வாங்கப்படவுள்ளது. 

 130  புதிய ஊர்திகள் இயக்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் அதிநவீன 120  ஆம்புலன்ஸ் ஊர்திகளும் அடங்கும். இதன் பயனாக தமிழகத்தில் மொத்தம் 1,505 அவசர சிகிச்சை ஊர்தி செயல்பட உள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2.50 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள்  அவசர சிகிச்சை ஊர்தி மூலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இதற்கென 450  ஆம்புலன்ஸ் ஒதுக்கப்பட்டுள்ளது. மூச்சுதிணறலுடன் வரும் நோயாளிகளையும் காப்பாற்றும் வகையில் அனைத்து வசதிகளையும் கொண்டு செயல்பட்டு வருகிறது. 108 ஊh;தியினை அழைத்தவுடன் தங்கள் கைகளில் உள்ள ஆன்ட்ராய்டு போன்களிலேயே 108 வாகனம் எவ்வளவு தொலைவில் வருகிறது என்பதை  அறிந்து கொள்ளும் செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்படும். 

தமிழகத்தில்தான்; ஒரு நாளைக்கு 85,000  பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதுடன், ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது.  நோய் பாதிப்பிற்குள்ளான எவரும் விடுபடக் கூடாது என்பதற்காக ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அரசு மேற்கொண்ட தொடர் நடவடிக்கையின் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு 10 சதவீதத்திற்குள் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையையும் 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

. மழைக்காலம் தொடங்கியுள்ள சூழ்நிலையில் தமிழகத்தில் எவ்வித நோய்தொற்றும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

மேலும் கொரோனா தடுப்பூசி பரிசோதனை பணிகளில் தடுப்பபூசியை போட்டுக்கொள்ள விருப்பம் உள்ளவர்கள் அழைக்கும் பணி இவ்வாரம் துவங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உரிய விதிமுறைகளின் படி பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் 80 சதவீத நோயாளிகள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றதுடன், 75 முதல் 80 சதவீத பரிசோதனைகளும் அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட அனைத்து ஊழியர்களுக்கும் உரிய கௌரவம் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்றார் 

 அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர். 


Top