logo
 புதுக்கோட்டையில் கைத்தொழிலை செய்து பிழைக்கும்  மாற்றுத்திறனாளி தம்பதிக்கு அரசு உதவி கிடைக்குமா ?

புதுக்கோட்டையில் கைத்தொழிலை செய்து பிழைக்கும் மாற்றுத்திறனாளி தம்பதிக்கு அரசு உதவி கிடைக்குமா ?

02/Dec/2020 02:04:47

புதுக்கோட்டை நகரில் சந்தைப்பேட்டை அருகில் வசித்துவரும் மாற்றுத்திறனாளி தம்பதியினர் .ஹயாத் பாட்ஷா- அவரது  ரம்ஜான்  பேகம். இவர்கள் இருவரும் ஊனமுற்றோர் ஆவர்.  2015 -இல்  திருமணம் செய்து கொண்ட இவர்கள் தங்கள் பிழைப்புக்காக  ஹயாத் பாட்ஷா  தகரத்தொழில் செய்தும் சில  பொருட்களை மூன்று சக்கர சைக்கிள் வண்டியில் வைத்து பல்வேறு பகுதிகளுக்கு  சென்று விற்பனை செய்துவருகிறார்.


 இவரது மனைவி ரம்ஜான்பேகம் தனது வீட்டிலே  கை தையல் மிஷினில் துணிகள்  தைத்தும்,வயர்கூடை பின்னுவதையும்  கைத்தொழிலாக செய்துவருகிறார். கிடைக்கும் சொற்ப வருமானத்தில்  இருவரும் குடும்பம் நடத்தி வருகின்றனர் ஹயாத்பாட்ஷா கூறுகையில் புதுகை நகரில் சிறிய பெட்டிகடைவைத்து கொள்ள நகராட்சி மூலம் இடம் கேட்டு மனு கொடுத்துள்ளேன்.  மேலும் சிறிய கடை வைப்பதற்கு தகரப்பெட்டியும் அமைத்துக்கொடுத்தால் நான்செய்யும்  பொருட்களை வைத்து விற்பனை செய்துகொள்வேன்.

 நம் மாவட்டத்தைச்சேர்ந்த மக்கள் நல்வாழ்வுத்துறைஅமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களும்,  மாவட்ட  ஆட்சியரும்  உதவிசெய்தால்   ஓரிடத்தில் இருந்தே எனது சிறு தொழிலை செய்து பிழைத்துக் கொள்வேன். தற்போது வாடகை இடத்தில்.வசித்து.வருகிறேன். மேலும், பல்வேறு பகுதிகளுக்கு நகர்ந்து சென்றால்தான்  வருமானம் கிடைக்கும் என்ற  நிலை உள்ளது.  ஒரே இடத்தில் இருந்து அலைச்சலின்றி தொழில் செய்ய அரசு கருணை காண்பிக்க வேண்டும், உழைப்புக்கு ஊனம் ஒரு தடையில்லை   என்றார்.  மாற்றுத்திறனாளிகள்  செய்யும் பயனுள்ள எந்த ஒரு பொருளாக இருந்தாலும் பொதுமக்கள்   அனைவரும் வாங்கி எங்களது வாழ்வை ஒளிர  செய்ய வேண்டும் எனவும்  வேண்டுகோள் விடுத்தார் ( ஹயாத் பாட்ஷா-  98426 19221).

   உலகளாவிய ரீதியில் சர்வதேச ஊனமுற்றோர் தினம் ஒவ்வொரு ஆண்டிலும் டிசம்பர் 3 ஆம் தேதி  அனுசரிக்கப்படுகிறது. ஊனமுற்றோரின் பிரச்சினைகளை சர்வதேச ரீதியில் அனைத்து மக்களும் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்குரிய இடத்தையும், உரிமைகளையும் வழங்குவதில் யாரும் பின் நிற்கக்கூடாது என்ற எண்ணக் கருவினை மக்கள் மத்தியில் உருவாக்குவதே இத்தினத்தின் பிரதான எதிர்பார்க்கையாகும். ஊனமுற்றோர் எனும் போது இவர்கள் நோயாளிகளாக அல்லாமல் சமூதாயத்தில் நம்பிக்கைக்குரிய பிரஜைகள் என்ற அடிப்படையில் நோக்கப்படுவதுடன் இவர்களும் மனிதாபிமான சிந்தனை மிக்கவர்களே என்பதை மையமாகக் கொண்டு உலகம் முழுவதும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தியாவில் சமுதாய நீதி மற்றும் அதிகார அமைச்சின் ஊனமுற்றோர் நலப்பிரிவு (The Disability Division in the  Ministry of Social Justice & Empowerment), ஊனமுற்றோரின் அதிகாரங்களையும் உரிமைகளையும் மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தெற்காசிய நாடுகளைப் பொருத்தவரையில் ஊனமுற்றோருக்கு பல்வேறு வசதிகள் வாய்ப்புகளை வழங்குவதில் இந்தியா முன்னிலையில் உள்ளது. குறிப்பாக இந்திய அரசியலமைப்பின் கீழ் சமுதாயத்தில் அனைத்து மனிதர்களுக்கும் சமஉரிமை, சுதந்திரம், நீதி மற்றும் கண்ணியம் போன்றவற்றைத் தர உறுதியளிப்பது போலவே, அச்சமுதாயம் ஊனமுற்றோரையும் சேர்த்துக் கொண்டதாகவே அமைய வேண்டும் என்று ஐயத்திற்கு இடமின்றி ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் ஊனமுற்றோருக்கான உரிமைகளை, அதிகாரங்களைப் பெற்றுத்தரும் பொறுப்பினை மாநில அரசுகளுக்கு நேரடியாக வழங்கியுள்ளன. இத்தகு சூழலில், புதுக்கோட்டையைச்  சேர்ந்த ஊனமுற்ற தம்பதிக்கு அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

Top