logo
புயல் எச்சரிக்கை: தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 120 பேர் கடலூர் வருகை

புயல் எச்சரிக்கை: தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 120 பேர் கடலூர் வருகை

23/Nov/2020 08:12:35

கடலூர்: புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து அரோக்கோணத்திலிருந்து புறப்பட்ட தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 120 பேர் திங்கள்கிழமை கடலூர் வந்தடைந்தனர்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் காரணமாக கடலூர் துறைமுகத்தில் இன்று காலையில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்புப் பணிகளில் ஈடுபட கடலூர் மாவட்ட கலெக்டரின் அழைப்பை ஏற்று அரக்கோணம் அருகே நகரி குப்பத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தலா 20 பேர் கொண்ட 6 குழுக்கள் அரக்கோணத்தில் இருந்து கடலூருக்கு இன்று காலை பேருந்துகளில் புறப்பட்டனர். அவர்கள் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து சேர்ந்தனர்.மழை மற்றும் புயலால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் அவர்கள் உடனடி மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுவார்கள்.

இக்குழுவினர் தங்களுடன் ஆழமுள்ள பகுதிகளிலும் நீந்திச் செல்ல தேவையான உபகரணங்கள், போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் விழுந்து கிடக்கும் மரங்களை அகற்ற தேவையான அதிநவீன கருவிகள் மற்றும் நீர்சூழ்ந்த பகுதிகளுக்கு செல்ல தேவையான படகுகள் ஆகியவற்றை கொண்டு வந்துள்ளனர். மேலும் மக்களின் உயிர்காக்க தேவையான மருத்துவ குழுவினரையும் அழைத்து வந்துள்ளனர். 


Top