logo
டிசம்பர் 7–ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் திறப்பு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

டிசம்பர் 7–ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் திறப்பு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

01/Dec/2020 08:47:11

சென்னை: டிசம்பர் 7–ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்க முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அனுமதி அளித்துள்ளார்.

மருத்துவ கல்லூரிகளும் செயல்படும். இந்த ஆண்டு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த புதிய மாணவர்களுக்கு மட்டும் அடுத்த ஆண்டு பிப்ரவரி 1–ஆம்  தேதி கல்லூரிகள் செயல்பட அனுமதி அளிக்கப்படுவதாக முதலமைச்சர் கூறியிருக்கிறார்.


இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு டிசம்பர் 31–ஆம்  தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும், டிசம்பர் 7–ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படுமென முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: இந்த ஆண்டு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்தவர்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 1–ஆம்  தேதி கல்லூரி திறக்கப்படும்.மெரினா உட்பட கடற்கரை  மற்றும் சுற்றுலா தலங்களுக்கு  14– ஆம்  தேதி முதல்  அனுமதியளிக்கப்படும்.  அரசியல், மதம், பொழுதுபோக்கு கூட்டங்களுக்கு  டிச.1– ஆம்  தேதி முதல் அனுமதியளிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

அதன் விளைவாக நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கியமாக, மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று 6.55 சதவிகித்துக்கு கீழ் குறைந்தது . தினசரி பாதிப்பு 1600-க்கு கீழ் உள்ளது..முககவசம் அணியுங்கள்; இடைவெளியை கடைப்பிடியுங்கள்.அரசு நடவடிக்கைக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தாருங்கள் என அவர் தெரிவித்துள்ளார். 



Top