logo
இந்தியாவிலேயே உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து 6 -ஆவது முறையாக முதலிடம்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

இந்தியாவிலேயே உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து 6 -ஆவது முறையாக முதலிடம்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

28/Nov/2020 11:13:13

புதுக்கோட்டை:  உடல் உறுப்பு தானத்தில் இந்த ஆண்டு இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் பெற்றமைக்கான (தொடர்ந்து 6-ஆவது முறையாக) மத்திய சுகாதாரம் மற்றும்; குடும்ப நலத்துறை அமைச்சர் . ஹர்ஷ் வர்தன், இணை அமைச்சர் அஷ்வினி குமார் சௌபே ஆகியோர் இன்று (27.11.2020) மாண்புமிகு தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கரிடம் காணொலிக்காட்சி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அரசின் விருதினை  வழங்கினர்.


 பின்னா; மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர்  செய்தியாளர்களிடம் கூறியதாவது.

வரலாற்று சிறப்பு நிகழ்வாக உடல் உறுப்பு தான தினத்தன்று  உடல் உறுப்பு தானத்தில் தொடர்ந்து 6 -ஆ வது முறையாக முதலிடத்திற்கான மத்திய அரசு விருது கிடைத்திருப்பது மிகவும் பெருமைக்குரிய நிகழ்வாகும். ஏற்கெனவே தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை இந்தியாவிலேயே முன்னோடியாக திகழ்கிறது. குறிப்பாக குழந்தை இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்துதல், தாய் இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்துதல், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துதல் போன்றவற்றில் இந்தியாவில் பிற மாநிலங்களிலேயே மிகச்சிறப்பாக செயல்படும் மாநிலம் என்று எல்லோராலும் பாராட்டப்படுவது மிகபெருமைக்குரிய ஒன்றாக உள்ளது.


மேலும் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறையை ஊக்குவிக்கும் வகையில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடா;ந்து 6 -ஆவது முறையாக முதலிடத்திற்கான  மத்திய அரசின் விருது பெற்றுள்ளது. கொரோனா தொற்று காலம் என்பதால் இன்றைய தினம் 11-ஆவது இந்திய உடல் உறுப்பு தின விழாவில் உடல் உறுப்புதானத்தில்  தமிழகம் முதன்மை மாநிலமாக முதலிடம் பெற்றமைக்கான விருதினை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்  இணை அமைச்சர் ஆகியோரிடமிருந்து காணொலிக்காட்சி வாயிலாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெற்றுக் கொள்ளப்பட்டது.


இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்விற்கு முதுகெலும்பாக இருக்கக் கூடிய கொடையாளிகளுக்கு இந்த விருதினை காணிக்கையாக்குகின்றோம். குறிப்பாக தமிழகத்தில் 1,392 கொடையாளர்களிடமிருந்து 8,245 உடல் உறுப்புகள் தானமாக பெற்று வழங்கப்பட்டுள்ளது. உடல் உறுப்பு தானத்தை மிகப்பெரிய மக்கள் இயக்கமாக மாற்றியது  இந்த அரசுதான்.


தமிழக முதல்வர்  உடல் உறுப்பு தானம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா;வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்துள்ளார். இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் இந்த விருது கிடைக்கப்பெற்றதற்கு  முதல்வருக்கு  மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

உடல் உறுப்புதானம் குறித்து விழிப்புணப்வை ஏற்படுத்தும் வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகப்பெரிய அளவிலான மாராத்தான் நடத்தப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது குறித்து  மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் வெகுவாக பாராட்டினார். .இத்தகைய பாராட்டு கொரோனா காலத்தில் மிகச்சிறப்பாக பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது.


குறிப்பாக உலகளாவிய கொரோனா தொற்று காலத்திலும் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறையின் சாh;பில் 107 நபர்களுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையும், 183 நபர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும், இதைவிட சிறப்பாக கொரோனா தொற்றால் நுரையீரல் முழுமையாக பாதிப்படைந்த 6 நபர்களுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டமைக்காவும்  மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பாராட்டியுள்ளார்.இத்தகைய தொடர் அர்ப்பணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள உடல் உறுப்புதான அமைப்பு இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மிக நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கண்தானம், ரத்த தானம் மற்றும் கொரோனா தொற்று காலத்தில் பிளாஸ்மா தானம் உள்ளிட்டவைகளில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாகவும், மிகப்பெரிய சுகாதார கட்டமைப்பை கொண்ட மாநிலமாகவும் திகழ்கிறது. 

மேலும் உலகளவில் இரண்டு கைகளையும் மாற்றி அறுவை சிகிச்சை மேற்கொண்டது இன்றளவிலும் தமிழக சுகாதாரத்துறையின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாக திகழ்கிறது. உடல் உறுப்புதானத்தை எளிதாக்கும் வகையில் கொடையாளர்கள் இணையதளம் வாயிலாக பதிவு செய்யும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும்  உடல் உறுப்புகளை கொண்டு செல்வதை எளிதாக்கும் வகையில் ஏர் ஆம்புலன்ஸ் சேவையை விரைவில் செயல்படுத்தப்படவுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. 

தமிழகத்தில் பணிநியமனத்தின் போது முன்னுரிமை அளிக்கப்படுவது போல கொடையாளர்களின் குடும்பத்தினருக்கும் அத்தகைய முன்னுரிமை வழங்க மத்திய அரசிடமும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது போன்று நிகழ்வுகள் மூலம் உடல் உறுப்பு தானம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமையும். உடல் உறுப்பு தானத்தின் மூலம் கடைசி நேரத்தில் உயிருக்கு போராடக் கூடியவர்களுக்கு உதவும் மிகப்பெரிய வாய்ப்பாக அமையும் என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர். இதில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி உடனிருந்தார்.


Top