logo
புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நடிகர் தவசி மரணம்

புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நடிகர் தவசி மரணம்

23/Nov/2020 09:31:18

மதுரை: புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நடிகர் தவசி  காலமானார்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே மட்டப்பாறையைர் சேர்ந்தவர்  திரைப்பட நடிகர் தவசி .( இவர், கிழங்கச் சீமையிலே படத்தில்  துணை நடிகராக அறிமுகமாகி தற்போது பல திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை பாத்திரங்களில் நடித்து வந்தார்.

ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துப் புகழ்பெற்ற இவர், கடைசியாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவரவிருக்கும் அண்ணாத்த படத்திலும் நடித்துள்ளார். இதற்கான படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் முடிந்தது.

இவர், கடந்த ஆண்டு தேனி மாவட்டத்தில் கார் விபத்து ஒன்றில் சிக்கி மருத்துவச் சிகிச்சை பெற்று வந்த போது தான் புற்று நோய் பாதிப்பிருப்பது கண்டறியப்பட்டு, அதற்கும் சிகிச்சைப் பெற்று வந்தார். இருப்பினும், போதிய பண வசதியின்றி சிகிச்சையைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டார்.

இந்நிலையில், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 3 நாள்களாக புற்று நோய்க்கு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில், நடிகர் தவசி சிகிச்சை பலனின்றி இன்று(நவ.23) உயிரிழந்தார். இவருக்கு அங்கம்மாள் என்ற மனைவியும், மகன் பீட்டர்ராஜ். மகள் முத்தரசியும் உள்ளனர்.

Top