logo
மீண்டும் கொரோனா அதிகரிப்பு: மீண்டும் பள்ளிகளை மூட உத்தரவு

மீண்டும் கொரோனா அதிகரிப்பு: மீண்டும் பள்ளிகளை மூட உத்தரவு

20/Nov/2020 05:13:53

நியூயார்க்:கொரோனா இரண்டாம் அலையால், அனைத்து பள்ளிகளையும் மீண்டும் மூட, நியூயார்க் மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. கொரோனா தொற்று பரவி ஓராண்டு கடந்தும் அதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட ஒருசில நாடுகளில் சில மாதங்களில் தடுப்பு மருந்து நடைமுறைக்கு வந்துவிடும் என எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும் உலகளவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா தான் முதன்மை இடத்தில் உள்ளது.

அங்கு பெரியளவில் ஊரடங்கு நடைமுறைகள் கடைபிடிக்கவில்லை என்பதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில், நியூயார்க் நகரில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் இன்று முதல் பள்ளிகளை மீண்டும் மூட மேயர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மக்கள்தொகை அடர்த்தி காரணமாக நியூயார்க் நகரில் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நியூயார்க்கில் 6 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, 34 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வைரஸ் பரவல் சற்று குறைந்திருந்த போது நியூயார்க் நகரில் உள்ள பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 5 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

இதன்காரணமாக மாணவர்களின் நலன் கருதி இன்று முதல் நியூயார்க் நகரில் உள்ள பள்ளிக்கூடங்கள் காலவரையின்றி மூடப்படுவதாக நகர மேயர் பில் டி பல்சியோ தெரிவித்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பள்ளிக்கூடங்கள் மூடப்படுவதாகவும், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 


Top