17/Nov/2020 11:30:41
புதுக்கோட்டை: மாவட்ட ஏஐடியுசி கட்டட தொழிலாளர் சங்கமாவட்ட தலைவர் ஆர் கண்ணையன் தலைமையில் நடைபெற்றது மாவட்ட குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பிற தீர்மானங்கள்: நவம்பர் 26 ஆம் தேதி நடைபெறும் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் அனைத்து சங்க முடிவின்படி கட்டட தொழிலாளர்கள் அனைவரும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தொழிலாளர் நல வாரிய அலுவலகத்திற்கு தொழிலாளர் உதவி ஆணையர் பணியிடம் நீண்டகாலமாக நிரப்பப்படவில்லை பிற மாவட்டங்களில் பணி புரியும் அதிகாரிகளுக்கு கூடுதலாக பொறுப்பு அளிக்கப்படுவதால் அவர்களின் பணிச்சுமை காரணமாக மாவட்டத்தில் நலவாரிய பணிகள் முடங்கி கிடக்கிறது.
விண்ணப்பித்து மூன்று நான்கு ஆண்டுகள் கடந்தும் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. பென்சன் பெறாமலே தொழிலாளிகள் காத்துக் கிடந்து ஏமாந்து இறந்துவிடும் கொடுமையும் நிகழ்கிறது. கல்வி உதவி. திருமணம். இயற்கை மரணம் உள்ளிட்ட பல பயன்கள் கொடுக்காமல் ஆண்டுக்கணக்கில் அலைக்கழிக்கப்படுகிறது. தற்போது ஆன்லைன் பதிவு புதுப்பித்தல் சரிபார்த்தல் அட்டை வழங்குதல் பணியும் உரிய அதிகாரி இல்லாததால் தாமதப் படுத்த படுகிறது.
ஆன்லைனில் விண்ணப்பங்களை சரிபார்ப்பதற்கு உரிய வழிகாட்டுதல் செய்து உடனுக்குடன் அட்டைகள் வழங்கிட தொடர்ந்து இந்த ஆண்டுக்குரிய கல்வி உதவிகள் விரைந்து கிடைத்திடவும் நடவடிக்கை எடுக்கவேண்டும். தகுதி இருந்தும் கொரோனா ஊரடங்கு கால நிவாரணம் கிடைக்காத தொழிலாளர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும்.
ஆன்லைன் பதிவில் குளறுபடிகளை நீக்க வேண்டும் எளிமைப்படுத்த வேண்டும் ஏற்கெனவே பதிவு செய்த தொழிலாளர்களின் விவரங்கள் அலுவலக கோப்பில் தவறாக இருப்பதை திருத்தி அமைத்திட வேண்டும். நிரந்தரமாக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மட்டும் செயல்படும் அளவில் தொழிலாளர் நல வாரியத்தில் உதவி ஆணையர் பணியிடம் நிரப்பப்பட வேண்டும் . இதில், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் சிறப்பு கவனம் எடுத்து அரசுக்கு பரிந்துரை செய்து பணியிடத்தை நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிரைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், சங்கத்தின் மாநில துணைத் தலைவர் கே சுரேஷ், மாவட்ட செயலாளர் டி சின்னையா, ஏஐடியுசி மாவட்ட தலைவர் கே ஆர் தர்மராஜன் ,செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட சங்க நிர்வாகிகள் சீ பாலச்சந்திரன் ,ஜி நாகராஜ், ஏழு அய்யாதுரை மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், நார்த்தாமலை ஆறுமுகம்.பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.