logo
ஈரோட்டில் 2 -ஆவது நாளாக   2,215 ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்: எம்எல்ஏ-ஆய்வு

ஈரோட்டில் 2 -ஆவது நாளாக 2,215 ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்: எம்எல்ஏ-ஆய்வு

22/Nov/2020 05:28:17

ஈரோடு: தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி இதற்கான ஆயத்தப் பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 

 8 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 19 லட்சத்து 16 ஆயிரத்து 809 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 9 லட்சத்து 36 ஆயிரத்து 22 பேரும், பெண் வாக்காளர்கள் 9 லட்சத்து 80 ஆயிரத்து 414 பேரும், இதர வாக்காளர்கள் 95 பேரும் அடங்குவர்.

இதைத்தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கல் உட்பட பணிகளுக்காக வாக்காளர் சேர்ப்பு சிறப்பு  முகாம் சனிக்கிழமை  நடந்தது

அதைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை ஈரோடு  மாவட்டம் முழுவதும் 2,215  வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் சிறப்பு முகாம் நடந்தது. புதிய வாக்காளர் சேர்க்கைக்கு படிவம்–6, நீக்கத்துக்கு படிவம்–7, திருத்தம் செய்ய படிவம் – 8, இடமாற்றம் செய்ய படிவம் – 8ஏ ஆகியவற்றில் விண்ணப்பம் செய்யலாம் என வலியுறுத்தப்பட்டிருந்தது. பொது மக்கள் குறிப்பாக பெண்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு படிவங்களை வாங்கிச் சென்று திருப்பிக் கொடுத்தனர்.

அதைத் தொடர்ந்து இன்று 2-ஆவது நாளாக மாவட்டம் முழுவதும் 2215 வாக்குச்சாவடி மையங்களில் இன்று நடைபெற்ற வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாமில் நேற்றைவிட  மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.குறிப்பாக கல்லூரி மாணவிகள் அதிகளவில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விண்ணப்பப் படிவங்களை வாங்கி நிரப்பினர்.  மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், எம்எல்ஏ- தென்னரசு ஆகியோர் இரண்டாவது நாளாக நடந்த  சிறப்பு முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Top