logo
குருபெயர்ச்சி(15-11-2020) பலன்கள் .. பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள்

குருபெயர்ச்சி(15-11-2020) பலன்கள் .. பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள்

11/Nov/2020 08:48:31

புதுக்கோட்டை:  குருபெயர்ச்சி-  வருகிற 15-11-2020 -அன்று இரவு 9.28 மணிக்கு தனுசு ராசியிலிருந்து மகரராசிக்கு குரு பகவான் பிரவேசிக்கிறார். இந்த ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும்

 குரு பார்வையால் சார்வரி ஆண்டில் யாருக்கு யோகம் வரும்: குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு பலம் அதிகம். எனவேதான் குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். தற்போது தனுசு ராசியில் இருக்கும் குரு தனது பொன்னான பார்வையால் மேஷம், மிதுனம், சிம்மம் ஆகிய ராசிகளைப் பார்க்கிறார். குரு பகவான் அதிசாரமாக தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு செல்கிறார். அங்கிருந்து குரு பகவான் ரிஷபம், கடகம், கன்னி ராசிகளின் மீது பார்வையை வீசப்போகிறார்.

 குருவின் சஞ்சாரம் பார்வையால் மேஷம் முதல் மீனம் வரை பலனடையப்போகும் ராசிக்காரர்கள் யார் என்று பார்க்கலாம். குருவிற்கு ஐந்து,ஏழு, ஒன்பதாம் பார்வைகள் உண்டு. இந்த பார்வைகளால் அந்த ராசிகள் சிறப்பான பலன்களை அடைவதோடு ஒவ்வொரு ராசிக்கும் அமையும் வீடுகளைப் பொருத்து பலன்கள் மாறுபடும். குருவின் பார்வையால் சிலருக்கு ஆரோக்கியம் கூடும் ஆயுள் அதிகரிக்கும்

குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். பணவரவும் அதிகமாக கிடைக்கும். குரு பகவான் மகரம் ராசியில் இருந்து ஐந்தாம் பார்வையாக ரிஷபம் ராசியையும், ஏழாம் பார்வையாக கடகம் ராசியையும், ஒன்பதாம் பார்வையாக கன்னி ராசியை பார்க்கிறார். அதிசார குரு பெயர்ச்சி மற்றும் குருவின் பார்வையால் நூற்றுக்கு நூறு பலனடையப் போகும் ராசிக்காரர்கள் யார் என்று பார்க்கலாம்.

 இது குறித்து,  புதுக்கோட்டை கீழ 3-ஆம் வீதியில் உள்ள மாநில நல்லாசிரியர் விருது பெற்ற  அரசுப்பள்ளி ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ஜோதிடர் என். கோபாலக்கிருஷ்ணா சர்மா  அளித்துள்ள தொகுப்பில் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படியிருக்கும் என்பதை பார்ப்போம்

மேஷ ராசி:

இதுவரையில் 9-ஆம் இடமான பாக்கியஸ்தானத்தில், ஆட்சி மற்றும் மூலத்ரி கோணத்தில் இருந்து கொண்டு பலவிதமான நன்மைகளை செய்த தேவ குரு, ப்ரஹஸ்பதி 15-11-2020 -இல் 10 வது  ராசியான மகர ராசிக்கு உத்திராடம் 2 ம் பாதத்தில், மேஷ ராசி சுபர் சூரியன் சாரத்திற்கு வருகிறார். 10 -ஆம் இடத்து குரு மகர ராசியில் நீசம் பெற்றும் இருப்பதால், எதிலும் அவசரப்படாமல் நிதானமாக இருக்க வேண்டும். காரியங்கள் கைக்கூட தாமதம் ஆகும். ஆனால்,

 27-12-2020 -இல் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி சனீஸ்வரர் பெயர்ச்சியடைந்து, உத்திராடம் 2 -ஆம் பாதம் மகர ராசிக்கு சென்று தன் சொந்த வீட்டில் 2 ½ ஆண்டுகள் இருப்பார்அப்பொழுது  குருவிற்கு நீசபங்கம் ஏற்பட்டு, நற்பலன்களை கொடுப்பார். இருப்பினும் சனிக்கு சூரிய சந்திர செவ்வாய் சாரம் சாதகம் இல்லாமலும், குருவிற்கு நட்பு சாரமாகவும் இருக்கும். குருவின் பார்வை 5, 2 ம் இடமான குடும்பம், தனம் இவற்றையும், ஏழாம் பார்வை, 4 ம் இடமான சுகம், வீடு, பூமி, தோட்டம் கிடைக்கும் வசதியையும், 9 -ஆம் பார்வை, 6 -ஆம் வீட்டை பார்ப்பதால், கடன், வியாதி சத்ருக்கள் இருக்காது.

எனினும் வரும் தை மாதத்தில் குரு பகவான் தாமத பட்ட திருமணங்களை நடத்தி வைப்பார். பிரதி வியாழன் கிழமை கண்டியூர் ப்ரம்ம தேவரை வழிப்பட்டு வரவும். நம்புங்கள் நல்லதே நடக்கும் குருபகவான் அதிசார கதியில் (5-4-2021)   அவிட்டம் 3, சிம்மராசி சென்று மீண்டும் வக்ர கதியில் பூர்வ ராசியான மகரத்திற்கு வந்தாலும் பூர்வா ராசியின் பலனே தொடரும்

 ரிஷப ராசி:

சுக்கிரன் வீடான ரிஷப ராசிக்கு 8, 11 -ஆம் இடத்திற்குரிய குரு உதவிட மாட்டார். இது காலும் அஷ்டமாதிபதி குரு அஷ்டமத்தில் வலுத்து, ஆட்சியில் இருந்ததால், பலவித கஷ்டங்கள், குடும்ப பிரச்சனை, உத்தியோகத்தில் உரிய சம்பளம் கிடைக்காமல் இருத்தல், ஆண் பெண்களுக்கு திருமணம் முடிக்க முடியாத நிலைப்பாடு இருந்தது.  சனீஸ்வரருக்கு அஷ்டமச்சனியாக இருந்துகொண்டு, மூட்டுவலி, இடுப்புவலி, கண், காதுகளில் நோய்களை கொடுத்து கஷ்டத்தை கொடுத்தது. 15-11-2020 குரு பெயர்ச்சி ரிஷபத்திற்கு 9 -ஆம் வீடான பாக்ய ஸ்தானமான மகர ராசியில் சனீஸ்வரரின் சொந்த வீட்டிற்கு பெயர்ச்சியடைகிறார்

ரிஷப ராசிக்கு சனீஸ்வரர் யோகக்காரர். 9 , 10 என்ற திரிகோண - கேந்த்ரா ராசிக்குடையவர். குருவின் நீசம், சனீஸ்வரரின் ஆட்சி பலத்தினால் பங்கமாகி 27-12-2020 முதல் 11 மாதங்களுக்கு மிக மிக நல்ல பலன்களை தரவுள்ளார். உடல் ஆரோக்யம் சீராகும். பூமி, வண்டி, வாகனம் வாங்க முடியும். வீட்டில் கெட்டி மேளம் கொட்டி திருமணம் , சீமந்தம், புத்திரபாக்கியம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். குருவின் பார்வை 5,7,9 -இன்  மூலம், ரிஷபராசியையும், 3 -ஆம் இடமான வெற்றி, வீரியம், தைரிய ஸ்தானத்தையும், 5 -ஆம் இடமான பதவி, புத்திர, பூர்வ புண்ணியஸ்தானத்தை பார்ப்பதால் உத்தியோக லாபம், புத்திர ஸ்தான ப்ராப்தி கிடைக்கும். ஆதி சங்கரர் எழுதி உள்ள சுப்ரமணிய புஜங்கம் 18 -ஆவது ஸ்லோகத்தை பிரதானமாக நாள்தோறும் 16 முறையும், மொத்தமுள்ள 33 தமிழில் உள்ள ஸ்லோகத்தை தினம் காலை, மாலை படித்து வந்தால், தம்பதிகளுக்கு நிச்சயமாக சண்முகநாதன்  பிறப்பார்  என்பது  உறுதி.

 மிதுன ராசி:

 இது காலபுருஷ ராசிகளில் 3 -ஆவது ராசியாகும். இதன் அதிபதி புதன் கிரஹம் . புதன் வித்யாகாரகன். 15-11-2020 குரு பகவான் தனுர் ராசியில் இருந்து மகர ராசிக்குள் பிரவேசிப்பது, மிதுன ராசிக்கு 8 -ஆம் இடமான அஷ்டமஸ்தானமாகும். 8 -ஆம் இடத்து குரு, கஷ்டத்தையும், பிரச்னைகளையும் கொடுக்கும். மேலும் குரு, மகர ராசியில் நீசம் பெறுகிறார். மிதுன ராசிக்கு 7 , 10  -ஆம் இடத்துக்குடைய சுபர் குருவிற்கு கேந்திராதிபத்ய உபயராசியான மிதுனத்திற்கு பாதகாதிபத்ய தோஷம் உள்ளவர் நீசம் பெறுவது நன்மை தரும். ஆனால் 27-12-2020 -இல் நடை பெறவுள்ள சனீஸ்வரர் மகர ராசிக்கும் வந்து தன் சொந்தவீட்டில் ஆட்சி பெற்று அஷ்டமசனியாக அமர்வதால், குருவிற்கு நீச பங்கம் ஏற்படுவதால் குரு உதவி செய்யமாட்டார். அஷ்டமசனியும் படாதபாடுபடுத்தும். எந்த ஜாதகருக்கும் 6 -ஆம் இடமும், 8 -ஆம் இடமும் வலுக்கக் கூடாது

இப்பொழுது 8 -க்குடைய சனி 8 -இல் வலுத்துள்ளது. இந்த ராசிக்காரர்களுக்கு கடன் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் தனி கவனம் தேவை. திருமண தடைகள் வரக்கூடும். மன நிம்மதி கெடும். ஏப்ரல் 2020 -இல் குருவின் அதிகார கதியினால் கும்பராசிக்குள் இருக்கும் 5 மாத காலம் சற்று மன நிம்மதி காணப்படும். புதன் ஷேத்திரமான திருவெண்காடு (வழி) சீர்காழி சென்று அங்குள்ள 3 குளங்களில் நீராடி, பிரம்மபுரீஸ்வரரை தரிசித்து, அர்ச்சித்து, பிரார்த்தித்து வர நன்மைகள் கிடைக்கும். அதோடு வியாழக்கிழமைகளில் குரு தட்சிணாமூர்த்திக்கும், பிரதி சனி கிழமைகளில் சனீஸ்வரர், ஆஞ்சேநேயரை வழிபடவும். இராமாயணத்தில் சுந்தரகாண்டம்  68 சர்க்கங்களை தினம் ஒரு சர்க்கம் படித்து வர, சோதனைகள், வேதனைகள் குறைந்து  நன்மை நிச்சயம் கிடைக்கும்

 கடக ராசி:

இந்த ராசி காலா புருஷ ராசியின் 4 ராசி. கடக ராசியின் அதிபதி மனோகாரகன் சந்திரன். இந்த ராசியில் புனர்பூசம்  4 -ஆம் பாதம், பூசம், ஆயில்யம் நக்க்ஷத்திரக் காரர்கள் இருக்கிறார்கள். கடக ராசிக்கு, குரு 6 -ஆம் வீடான ருண, ரோஹா, சத்ரு ஸ்தானத்திற்கும், 9 -ஆம் வீடான பாக்யஸ்தானத்திற்கும் உரியவர். 15-11-2020 ல் நடைபெறவுள்ள குரு பெயர்ச்சி, தான் இப்பொழுது இருக்கும் 6 -ஆம் வீடான தனசிலிருந்து, 7 -ஆம் வீடான மகர ராசிக்கு வந்து அங்கு நீசம் அடைந்து, பிறகு 27-12-2020 சனிப்பெயர்ச்சியின் மகர ராசியில் ஆட்சி பலத்தினால், குரு நீசபங்கராளு யோகம் பெறுவதால், இந்த ராசிகாரர்களுக்கு திருமணம், புத்திரபாக்கியம், உத்தியோகலாபம் ஏற்படும் நல்ல செய்திகள் வரும். வீடு, பூமி, சொத்துக்கள் வாங்க குரு துணையாக இருப்பார். இரும்பு தொழில், பொறியியல் படிப்பு மேலோங்கி நிற்கும், பொருளாதாரம் உயரும். 9 க்குடைய திரிகோணாதிபதி, 7 -இல் மகர ராசியில் கேந்திரம் அடைந்து, சுப சார பலன்களை பெறுவதால் நன்மைகள் அதிகம்   நடக்கும்.  

  சிம்ம ராசி :

இந்த ராசிக்குள் மகம், பூரம், உத்திரம் 1 -ஆம் பாதம் நக்க்ஷத்திரங்கள் உள்ளன. சிம்மராசியின் அதிபதி சூரியன். யோககாரகன்செவ்வாய். இந்த ராசிக்கு குரு, 5 , 8 வீடுகளுக்கு அதிபதி. இந்த குரு பெயர்ச்சியில் குரு 6 -ஆம் வீடான மகர ப்ரவேசம் ஊரே பகை என்ற வண்ணம் 50  சதவீதம் இருக்கும். அதே சமயம் 8 -க்கு உடைய குரு 6 -ஆம் இடத்தில மறைந்திருப்பதால், விபரீதராளு யோகமானது 50 சதவீத  நன்மையையும் செய்யும். 27-12-2020 சனி பெயர்ச்சி 6 -ஆம் ராசி மகரத்தில் ஆட்சிபெற்று இருப்பதால் எல்லாவிதமான அபீஷ்ட்டங்களையும் குருவும், சனியும் கொடுக்கவுள்ளார்கள். எனினும், பிரதி வியாழக்கிழமைகளில் குருவிற்கு அர்ச்சனை செய்து வழிபடவும்.

 கன்னி ராசி:

காலபுருஷ ராசியின் 6 -ஆவது ராசி. இந்த ராசியின் அதிபதி சுபர் புதன் இங்கு உச்சம் அடைகிறார். இந்த ராசிக்குள் உத்திரம் 2 , 3 , 4 , பாதங்கள் ஹஸ்தம், சித்திரை 1 , 2  , பாதங்களை கொண்டவர்கள் இருக்கிறார்கள். 15 .11. 2020 குரு பெயர்ச்சி, கன்னிக்கு 5 -ஆவது வீடான மகர ரசிக்கு வருவது நல்ல பலன்களைத் தரும். குருவிற்கு சாதகமாக சாரபலமும் உள்ளன. குருவின் 5 -ஆம் பார்வை,  கன்னிராசிக்கு  9  -ஆம் ராசி ரிஷபத்தையும், 7 -ஆம் பார்வையாக கன்னிக்கு லாபஸ்தானத்தையும், 9 -ஆம் பார்வையினால் கன்னிராசியையே குரு பார்ப்பதால், எதிர்பார்க்கின்ற அநேக சுப காரியங்களும் கைகூடும். குரு 5 -இல் திரிகோணஸ்தான சுபப்பலத்துடன் பார்ப்பதால், நற்பலன்கள் நிச்சயம் நடக்கும். . சனீஸ்வரரின் மகர ப்ரவேச ஆட்சி, குருவிற்கும், கன்னிராசிக்கும் நன்மையயை கொடுக்கும்.

 துலா ராசி:

காலபுருஷ  ராசியின் 7 -ஆவது ராசி, இந்த ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த ராசிக்குள் சித்திரை 3 , 4 பாதங்கள், ஸ்வாதி, விசாகம் 1 , 2 ,3 பதங்களைக் கொண்டவர்கள் இருக்கிறார்கள். துலாராசிக்கு குரு 3 , 6 -க்கு உடைய பாவி  15 - 11 - 2020  குரு பெயர்ச்சியினால் 4 -ஆம் வீடான மகரத்தில் அசுப குரு நீச்சம் அடைவது நல்லது. எனினும் 4 -ஆம் இடது குரு அளவாக நன்மை செய்யத குருவின் பார்வை துலாராசிக்கு 8 ,10 , 12 -ஆம் இடங்களை பார்ப்பதால் ஆயுள் பலம் உயரும், தொழிலில் அபிவிருத்தி அடையும், நிம்மதியான தூக்கம் வரும். 27-12-.2020 -இன் சனி பெயர்ச்சி, துலாராசிக்கு சனி ஒருவரே சுபர் என்ற வகையில் நன்மைகள் கூடும். தாமதப்பட்ட திருமணங்கள் இப்பொழுது நடக்கும். வாழ்க்கையில் வசந்தம் வீசும். வியாழக்கிழமைகளில் குரு கிரகஹத்தை வழிபடவும்.

விருச்சிக ராசி:

இது காலபுருஷ ராசிக்கு 8 -ஆவது ராசி. இதில் விசாகம் 4 , அனுஷம், கேட்டை நக்க்ஷத்திரங்கள் உள்ளன. இந்த ராசியின் அதிபதி செவ்வாய். இதுவரையில் இந்த ராசிக்கு 2 -ஆம் இடத்தில ஆட்சிபெற்று சொந்த வீடான தனுர் ராசியில் இருந்து கொண்டு பலவிதமான நன்மைகளை செய்து கொண்டிருந்த குரு பகவான் 15 - 11 - 2020 -இல் 3  -ஆவது ராசியில் திருதீய ப்ரகஸ்பதியாக உள்ளதால், மகர ராசியின் க்ரஹ பார்வைகள் 5 , 7 , 9 -இன் மூலம் ரிஷபம் 7 , கடகம் 9 , கன்னி 11 -ஆம் வீடுகளை குரு பார்ப்பதால், பாதிப்புகளை குறைக்கும். 27 - 12 - 2020 -இல் சனி பெயர்ச்சியடைந்து, விருச்சிக ராசிக்கு 3 -ஆவது ராசியான மகரத்தில் ஆட்சி பெற்று அமருவதால், குருவிற்கு நீசபங்க ராஜயோகம் ஏற்படுவதால், ஜனவரி 2021 முதல் உத்யோகத்தில் இடமாற்றம், பதவி உயர்வு, உடல் ஆரோக்யம் சீராகுதல், நல்ல கல்வி, தேர்வில் வெற்றி, 7 ½ வருஷ சனி முழுமையாக நீங்குதல், வீட்டில் சுப காரியங்கள் தொடர்ந்து நடக்கும் நல்ல காலமாகும்.

தனுசு ராசி:         

தனுசு ராசிக்கு அதிபதி குருபகவான், இதுவரையில் ஜன்ம ராமர் வனத்திலே என்ற பழமொழியைப்போல ஜன்ம குருவினால்  அவச்சம், காரியங்கள் எதிர்பார்த்தபடி அமையாதது போன்ற அவஸ்தை,, ராசியில் ஜன்ம கண்டக சனியின் தாக்கங்களை தைரியத்தினால் தாங்கிக்கொண்டு இருந்தீர்கள்.  15.11.2020 குருபெயர்ச்சியடைந்து உங்கள் ராசிக்கு 2-ஆம் இடமான மகர ராசிக்கு செல்கிறார்.  இதனால் குடும்பம், தனம், கல்வி, தேக அந்தஸ்து, கௌரவம், புகழ் போன்ற அனுகூலங்கள் கைகூடிவரும்.  எங்கும், எதிலும் எப்பொழுதும்; பிரகாசித்துக் கொண்டிருப்பீர்கள்.  இருப்பினும், 7½ வரு~ சனியின் பாதசனியின்ஆண்டுகள் சற்று உடல் உறுப்புகளில் காலில் பாதிப்பு வராமல் பார்த்துக் கொள்ளவும்.  சனீஸ்வரருக்கும், ஆஞ்சநேயருக்கும்  சனிக்கிழமைகளில் அர்ச்சனை, வடமாலை, வெற்றிலை மாலை சாத்திவர உத்தமம்

 மகர ராசி:

இது காலபுருஷ  ராசியிலிருந்து  10-ஆவது ராசி.  இதில் உத்திராடம் 2,3,4 பாதங்கள் திருவோணம், அவிட்டம், 1,2 பாதங்களை கொண்டவர்கள் இருக்கிறார்கள்.  மகர ராசியின் அதிபதி சனிஸ்வரர்.  இதுவரையில் தங்கள் ராசிக்கு 12-ஆம் இடமான தனில் விரய குருவாக இருந்தவர், 15.11.2020 குரு பெயர்ச்சியினால் ஜன்ம குருவாக மகரத்திற்கு வந்து நீசம் பெறுகிறார்.  மகர ராசிக்கு 3,12-க்குடைய குரு நல்லது பண்ணாது.  அவர் நீசம் பெற்றது ஒரு வகையில் நல்லதே.  27.12.2020-இல் சனிப்பெயர்ச்சி அடைந்து மகர ராசியில் ஜன்ம சனியாக வருவதால், குருவையும், சனியையும் சாந்தியடையச் செய்யவேண்டும்.  ஜனன கால ஜாதகத்தில் ;நன்கு நடந்துகொண்டிருந்தால், இந்த கோட்சார பலன்  பாதிப்பை தராது.  ஆகவே, வியாழக்கிழமைகளில் குருவிற்கு நெய் விளக்கு ஏற்றி, கொண்டக் கடலை சுண்டல் நைவேதியம், பாயஸம் நைவேதியம், முல்லை மலரினால் தட்சிணாமூர்த்தியை அர்ச்சித்தல், ஓம் நமொ பகவதே தட்சிணாமூர்த்தியே, மஹ்யம், மேதாம், ப்ரஞ்ஞாம், ப்ரய்சசஸ்வாஹா -என்ற மந்திரத்தை  தினம் 108 முறை சொல்லி வரவும்தன்வந்தரி மந்திரத்தை ஜபிக்கவும். ஒம் நமோ பகவதே வாசு மதேவாய தந்வந்தரயே, அம்ருத கலச ஹஸ்த்தாய, ஸர்வாமய வினா    சனாய, த்ரைலோக்ய நாதாய,  ஸ்ரீ மஹாவிஷ்ணு வே நமஓய்வு எடுக்கவும், புஷ்ட்டியான ஆஹாரம் சாப்பிடவும் ஆயுஷே தீர்க்காயுத்வாய  க்ருங்ணாமி  என்ற வேத வாக்கியபடி  ஷேமமாக இருப்பீர்கள்

கும்பராசி :

இது காலபுருஷ ராசிக்கு 11-ஆவது ராசி.  கும்பராசிக்கு அதிபதி சனீஸ்வரர்.  அவிட்டம் 3.,4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1,2,3  பாதங்களைக் கொண்டவர்களுக்கு, குரு 2 மற்றும் 11- ம் வீட்டதிபதி 11-ஆம் வீடான தனுசு ராசியில் ஆட்சி பெற்று, சனீஸ்வருடன் இணைந்திருந்தார்.  மந்தமமான பலன்களை கொடுத்து வந்தார்.  15.11.2020 -இல் குரு பெயர்ச்சியடைந்து,  குடும்பத்திற்கு 12 -ஆவது ராசியான மகர ராசியில் விரய குருவாக வருகிறார்;.  இதனால் உடல் ஆரோக்யத்தை பேணி காக்கவேண்டும்.  மேலும் 27.12.2020 -இல் சனி பெயர்ச்சி அடைந்து மகர ராசிக்கு சென்று ஆட்சியில் இருந்தாலும், 7 ½ வருட சனி ஆரம்பிக்கிறது.  கும்பராசிக்கு அதிபதியே சனியாயிருந்தாலும் சனி, கால் பகுதி, கண், காது, தொண்டை பகுதிகளில் சிறு சிறு உபாதைகளை உருவாக்குவார். வைத்ய சிலவு அதிகமாகும்.  உடல் ஆரோக்யம் சீராக இருக்காது.  கல்லீரல் பிரச்னையும் வரக்கூடும்.  சனீஸ்வரர் 12 ராசிகளையும் 1 முறை சுற்றிவர 30 ஆண்டுகள் ஆகும்.  ஜனனகால ஜாதகப்படி 3-ஆவது பாயாயம்: அதாவது 3 x 30 - 90  வயது வரை ஆயுள் உள்ளவர்களுக்கு இந்த 7 ½ வருட சனி அபாயத்தை தோற்றுவிக்கக்கூடும்.  இதற்குரிய சனீஸ்வரர் சாந்தி, தான தர்மங்கள் செய்தல், கோ தானம் செய்தல், பகவந்நாமாவை உச்சரித்தல், இதிகாச புராணங்களை கேட்டது, விஷ்ணுஸஹஸ்ர நாம பாராயணம், தீர்த்த யாத்திரை செல்லுதல், திருநள்ளாறு சென்று சனீஸ்வரரை வழிபடுதல் போன்றவைகளில் ஈடுபடவேண்டும்

மீன ராசி

இது காலபுருஷ ராசிக்கு 12-ஆவது ராசி.  மீன ராசிக்கு அதிபதி குரு.  இந்த ராசியில் புரட்டாதி 4-ஆம் பாதம், உத்தரட்டாதி, ரேவதி நட்சத்திரக்காரர்கள் உள்ளார்கள்.  இதுவரையில் இந்த ராசிக்கு 10-ஆம் இடத்தில் ஆட்சி பெற்றிருந்த குரு பதவியை பறிக்கவில்லை.  எனெனில், குரு, மீனராசிக்கும், தனுஸ்ராசிக்கும் அதிபதி.  15.11.2020-இல் குருபகவான் 11-ஆவது ராசியான மகரத்திற்கு வந்தவுடன் பல பல நன்மைகள், பணவரவு, தொழில் அபிவிருத்தி, கார்யானுகூலங்கள், திருமணம், புத்திர பாக்யம், வெளிநாடு செல்லுதல், படிப்பில் முன்னேற்றம், ஊதிய உயர்வு நிச்சயம்  கிடைக்கும்.  குரு நல்ல இடத்தில் இருந்துகொண்டு, 5,7,9 -ஆம் பார்வையினால் பார்க்கும் இடங்கள் சோபிக்கும்.  27.12.2020 சனிப்பெயர்ச்சியடைந்து மீனராசிக்கு 11-ஆவது ராசியான மகர  ராசிக்கு வந்து ஆட்சி பெற்று, நீச குருவிற்கு நீசசபங்கத்தை உண்டாக்கி குரு, சனி இருவரும் ஆச்சர்யப்படும் அளவிற்கு அற்புதமான நன்மைகளை செய்யவுள்ளார்கள்.பொதுவாக, 3ல் சனி 80% நன்மையையும், 6-இல் சனி 90% நன்மையையும், 11-இல் சனி 100%  செய்யும் என்பது உறுதி. பரிகாரங்கள் எதுவும் அவசியமில்லை.  சுபம். பேட்டி-   டீலக்ஸ் ஞானசேகரன், புதுக்கோட்டை.

 

 

Top