logo
தமிழகத்துக்கு மத்திய அமைச்சர் பதவி:புதுக்கோட்டையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தமிழகத்துக்கு மத்திய அமைச்சர் பதவி:புதுக்கோட்டையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

12/Jul/2021 05:42:39

புதுக்கோட்டை, ஜூலை: மத்திய அமைச்சராக எல். முருகன் மற்றும் தமிழக பாரதிய ஜனதாக் கட்சி தலைவராக அண்ணாமலை ஆகியோர் நியமனம் செய்யப்பட்டதை வரவேற்று புதுக்கோட்டை நகர பாரதிய ஜனதா கட்சியினர்  பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

 மத்திய அமைச்சராக முருகன் மற்றும் தமிழக பாரதிய ஜனதாகட்சி தலைவராக அண்ணாமலை ஆகியோரை நியமனம் செய்த பாரதிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து  புதுக்கோட்டை நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் நகர்த்தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நகர பொதுச்செயலாளர் லெட்சுமணன் முன்னிலையில் புதிய பேருந்து நிலையம் அருகே பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். 

இந்நிகழ்வில்,  மாவட்ட அரசு தொடர்பு தலைவர் மணிசுந்தரேசன், மாவட்ட ஓ.பி.சி.தலைவர் மணிராஜ்,மாவட்ட தொழில் பிரிவு தலைவர் சீனிவாசன், ஊடகப்பிரிவு சந்திரன், பிரசார பிரிவு ரவி உள்பட மாவட்ட, நகர பாரதிய ஜனதாக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Top