logo
ஈரோடு மாநகராட்சி சார்பில்  காய்கறி வியாபாரிகள் 500 பேருக்கு  தடுப்பூசி

ஈரோடு மாநகராட்சி சார்பில் காய்கறி வியாபாரிகள் 500 பேருக்கு தடுப்பூசி

19/Jun/2021 04:03:58

ஈரோடு, ஜூன்: ஈரோடு பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக அமைந்துள்ள காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் 500 போருக்கு மாநகராட்சி சார்பில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி சுகாதாரத் துறையினர் இணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் செய்து வருகின்றனர். குறிப்பாக தடுப்பூசி போடும் பணி  தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 69 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இது தவிர ஆங்காங்கே சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போது ஊரடங்கு காரணமாக  . . சி. பூங்கா பகுதியில் செயல்பட்டு வந்த காய்கறி மார்க்கெட் தற்காலிகமாக ஈரோடு பேருந்து  நிலையத்தில் செயல்பட்டுவருகிறது.

இங்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்து காய்கறிகளை வாகனங்கள் மூலம் ஏற்றி  சென்று  மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிக்கு  சென்று விற்பனை செய்து வருகின்றனர். இவர்களுக்காக நடமாடும் வாகனம் மூலம் காய்கறி விற்பனை செய்ய பாஸ் வழங்கப்பட்டு உள்ளது.

பொது மக்களுடன் நேரடி தொடர்பில் இவர்கள் உள்ளதால் மாநகராட்சி சார்பில் நடமாடும் வாகனம் மூலம் காய்கறி வியாபாரத்தில் ஈடுபடும் காய்கறி வியாபாரிகளுக்கு சனிக்கிழமை ஈரோடு பேருந்து  நிலைய வளாகத்தில் நடைபெற்ற தடுப்பூசி  முகாம் மூலம்   500-க்கும் மேற்பட்ட காய்கறி வியாபாரிகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டது.

வியாபாரிகள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து வட்டங்களில் நின்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர். கோவேக்சின், கோவிஷில்டு ஆகிய 2 தடுப்பூசிகளும் அவர்களுக்கு போடப்பட்டது.

Top