logo

ஈரோடு மாவட்டத்திலிருந்து தீபாவளிக்காக 150 சிறப்பு பஸ்கள் இயக்க முடிவு

06/Nov/2020 12:00:10

ஈரோடு: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மக்கள் இப்போது கொண்டாட்டத்திற்கு தயாராகி விட்டனர். கடைவீதிகள் ஜவுளி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. தற்போது கொரோனா காலக்கட்டம் என்பதால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அரசுவலியுறுத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் தீபாவளியன்று சிறப்பு பஸ்கள் இயக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கான வெளி மாவட்ட மக்கள் பல்வேறு வேலைகளில் ஈடுபடுகின்றனர். இவர்கள் முக்கியமான பண்டிகை எ அன்று சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இவர்களுக்கு என்று போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி தீபாவளி பண்டிகைக்காக ஈரோடு மாவட்டத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு 150 சிறப்பு பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 ஈரோடு  மாவட்டத்தில் 11 கிளைகளில் 800 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. கொரோனா  பரவல் தாக்கம் காரணமாக  சில மாதங்களாக பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பஸ்கள்  அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகள் உடன் இயக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் தற்போது 530 உள்ளூர் ,வெளிமாவட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

தற்போது தீபாவளி பண்டிகைக்காக 150 சிறப்பு பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை,  ,திருப்பூர் ,சேலம், திருநெல்வேலி உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது என்று  போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். 


Top