logo
பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் அறிவிப்பார் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் அறிவிப்பார் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

05/Nov/2020 11:49:37

ஈரோடு:பள்ளிகள் திறப்புகுறித்துமுதல்வ ர்அறிவிப்பார்.. கருத்துகேட்பு கண்துடைப்பு என ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு எதற்கெடுத்தாலும் கண்துடைப்பு என்றால் என்ன செய்வது பெற்றோர்களின் ஆலோசனை கேட்டபிறகுதான் முடிவெடுக்கப்படும். பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்கள் தங்கள் கருத்துகளை எழுத்து மூலமாகவும் கொடுக்கலாம் .அடுத்தாண்டு பொதுத் தேர்வுரத்தாகுமா என்றகேள்விக்கு அதுயோசிக்கவேண்டிய ஒன்றுதுறை என்னசொல்கிறது என்று தெரிந்துதான் தெரிவிக்க முடியும். அரசு பள்ளிமாணவர்கள் பொதுதேர்வுகள்  எதிர்கொள்வது குறித் துமுதல்வர் ஆய்வு செய்வார் என கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களைசந்தித்தஅமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்..

ஈரோடுமாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்றதொகுதிக்குட்பட்ட அயலூர் ஊராட்சியில் வேளாண் கூட்டுறவு வங்கியை துவக்கிவைத்த தமிழகபள்ளி கல்வித்துறை  அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் 35 பயனாளிகளுக்கு சிறுவணிக கடன்களை வழங்கினா ர்.அதனைதொடர்ந்துநம்பியூர் பகுதிகளில் சுமார் 340 கும் மேற்பட்ட பயனாளிக ளுக்கு சிறுவணிககடன் கன்று வளர்ப்புகடன் ஆதிதிராவிடர் நலதுறையின் மூலம் பட்டாவழங்குதல் உள்ளிட்டநலத்திட்டஉதவிகளைவழங்கினார்.


அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச ந்தித்தஅமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மருத்துவபடிப்பிற்கான 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் 303 அரசுபள்ளிமாணவர்கள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுஏழை எளிய அரசுபள்ளி மாணவர்களின் கனவுநிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகஅரசு ஆந்திராவயோ கேரளாவையோ கவனிக்கவேண்டியது இல்லை. 

மாணவர்களையும் பெற்றோர்களையும் கவனிக்கின்றஅரசு இந்தஅ ரசு என்றமுறையில் பள்ளிக்கள் திறப்பு குறித்து வருகிற நவம்பர் 9 ம் தேதிதலைமைஆசிரியர்கள்மற்றும் பெற்றோர்களிடம் கருத்துகேட்கும் கூட்டம் நடத்த அரசுமுடிவு செய்துள்ளது. இது குறித்து முதல்வரிடம் சமர்ப்பித்து பின்னர் முடிவு செய்யப்படும். மாணவர்களின் நலன் கருதி பல்வேறு நடவடிகைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்வேறு கருத்துகள் வந்ததன் அடிப்படையில் தான் முழுமையானகருத்துகேட்புக்கூட்டம் நடத்தப்படுகிறது. அதை தொடர்ந்து பள்ளிகள் திறப்புகுறித்து முதல்வர் அறிவிப்பார். கருத்து கேட்பு கண்துடைப்பு என ஸ்டாலின் தெரிவித்தகருத்துக்கு எதற்கெடுத்தாலும் கண்துடைப்புஎன்றால் என்ன செய்வது பெற்றோர்களின் ஆலோசனைகேட்டபிறகுதான் முடிவெடுக்கப்படும். பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்கள் தங்கள் கருத்துகளை எழுத்து மூலமாகவும் கொடுக்கலாம். நீட் தேர்வுபயிற்சி நேற்று துவங்கியுள்ளது. இதில் 15492 பயிற்சிபெறஉள்ளனர் இன்னும் சேரவிருக்கும்; மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்தாண்டு பொதுத்தேர்வு ரத்தாகுமாஎன்ற கேள்விக்கு அது யோசிக்க வேண்டிய ஒன்று. துறை என்ன சொல்கிறது என்று தெரிந்துதான் தெரிவிக்க முடியும். அரசு பள்ளிமாணவர்கள் பொதுதேர்வுகள்  எதிர்கொள்வது குறித்து முதல்வர் ஆய்வு செய்வார் எனஅமைச்சர் தெரிவித்துள்ளார் 


Top