logo
 வேலைவாய்ப்பு முகாம்களை இளைஞர்கள்  பயன்படுத்திக் கொள்ள முன் வரவேண்டும்- அமைச்சர் விஜயபாஸ்கர்

வேலைவாய்ப்பு முகாம்களை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள முன் வரவேண்டும்- அமைச்சர் விஜயபாஸ்கர்

03/Jan/2021 12:22:43

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர்  மதர்தெரசா பொறியியல் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பேசியதாவது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா;கள் வேலைவாய்ப்பை பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இலுப்பூர்  மதர்தெரசா பொறியியல் கல்லூரியில் ஏற்கெனவே 19.11.2020 மற்றும் 20.11.2020 ஆகிய 2 நாட்கள் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 2,500 -க்கும் மேற்பட்டவர்களுக்கு தனியார் நிறுவனங்களில்  வேலை வாய்ப்பு கிடைத்தது. மேலும் விடுபட்டவர்களுக்கு மீண்டும் ஒரு வேலைவாய்ப்பு முகாம் நடத்த கோரிக்கை வைக்கப்பட்டது. 

அதனடிப்படையில்,  இலுப்பூர் மதர்தெரசா பொறியியல் கல்லூரியில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இம்முகாமில் டி.வி.எஸ், ஐ.டி.சி, ரானே, பிh;லா, ஜி.வி.கே, எல்.ஐ.சி உள்ளிட்ட 115 -க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டனர். இம்முகாமில் தேர்வு பெற்றவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் பணிபுரிய பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.   

மேலும், தமிழகத்தின் தலைசிறந்த நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளதால் பணிநியமன ஆணை பெறுபவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். எனவே புதுக்கோட்டை மாவட்டத்தை சோ;ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பணி வாய்ப்பைப் பெற்று சிறந்த முறையில் பணியாற்றி வாழ்வில் முன்னேற வேண்டும் என்றார்  அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.

இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளார் எல்.பாலாஜிசரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், மதர்தெரசா கல்விக்குழும தாளாளர் ஆர்.சி.உதயக்குமார், அன்னவாசல் ஒன்றிய குழுத்தலைவா; வி.ராமசாமி, வேலைவாய்ப்புத்துறை மண்டல இணை இயக்குநர் அனிதா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் மணிகண்டன், இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர். 


Top