logo
தீபாவளிக்கு 14 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தீபாவளிக்கு 14 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

03/Nov/2020 09:21:46

சென்னை: பண்டிகை தினத்தையொட்டி சென்னையில் இருந்து 14,757 சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது: பண்டிகை தினத்தையொட்டி சென்னையில் இருந்து 14,757 சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . கொரோனா பரவல் காரணமாக குறைவான எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

சென்னையில் 5 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது. பண்டிகையை தினத்தையொட்டி தொடர்ந்து 5-ஆவது ஆண்டாக சிறப்பு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

Top