logo
மத்திய அரசைக் கண்டித்து  புதுக்கோட்டையில் காங்கிரஸ் சார்பில்  சத்யாகிரகப் போராட்டம்

மத்திய அரசைக் கண்டித்து புதுக்கோட்டையில் காங்கிரஸ் சார்பில் சத்யாகிரகப் போராட்டம்

01/Nov/2020 01:00:38

புதுக்கோட்டை:  மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்ட மசோதாக்களை திரும்பெற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் புதுக்கோட்டையிலுள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் சத்தியாகிரக அறவழிப் போரட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட விவசாயம் தொடர்பான மூன்று சட்டங்களுக்கு தமிழ்நாடு, பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயிகள் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டத்தை எதிர்த்து அறவழியில் போராட அனுமதி கேட்டிருந்த நிலையில் தமிழக அரசு போரட்டத்திற்க்கு அனுமதி வழங்கவில்லை.

இந்நிலையில், புதுக்கோட்டை பெரியார் நகரிலுள்ள மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சத்தியா கிரக போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டனர்.

 போராட்டத்துக்கு,  மாவட்டத்தலைவர்(வடக்கு) வி. முருகேசன், தெற்கு மாவட்டத்தலைவர் தர்ம. தங்கவேல் ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னாள் எம்எல்ஏக்கள் டி. புஷ்பராஜ், ராம.சுப்புராம், மாநில பொதுச்செயலர் ஏ. சந்திரசேகரன், முன்னாள் நகர்மன்றத்தலைவர் துரை.திவியநாதன், மாவட்ட துணைத்தலைவர்கள் ஆரோக்கியசாமி, எம்.ஏ.எம். தீண், என்.சி. ராதாகிருஷ்ணன்,  மாநிலச்செயற்குழு உறுப்பினர் ஜி.எஸ்.தனபதி.

வட்டாரத்தலைவர்கள் பழனிச்சாமி, மகாதேவன், செல்வராஜ், ராமையா, மாயக்கண்ணு, முருகேசன், ராமமூர்த்தி, எஸ்.எஸ்டி. பிரிவு மாநில துணைத்தலைவர் கண்ணன், மாவட்ட துணைத்தலைவர் ஏ. இப்ராஹிம்பாபு, வட்டார துணைத்தலைவர் சுப்பிரமணியன், முன்னாள் மாவட்டத்தலைவர் ஜெகந்நாதன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

பொன்னமாரவதி நகரத்தலைவர் எஸ். பழனியப்பன், நகரப் பொருளர் ஆசிரியர் பால்ச்சாமி, மாவட்டச்செயலர்கள் சரவணபவன் மணி, ஆர். பாஸ்கர், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ.எல். ஜீவானந்தம், வட்டார இளைஞர் காங்கிரஸ் எஸ்ய சுப்பையா உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Top