logo
இனிப்பு, பேக்கரி  உணவு தின்பண்டங்களுக்கு அதிக நிறங்களை சேர்க்கத்தடை: உணவு பாதுகாப்பு, மருந்து நிர்வாகத்துறை அறிவிப்பு

இனிப்பு, பேக்கரி உணவு தின்பண்டங்களுக்கு அதிக நிறங்களை சேர்க்கத்தடை: உணவு பாதுகாப்பு, மருந்து நிர்வாகத்துறை அறிவிப்பு

31/Oct/2020 11:36:21

புதுக்கோட்டை: இனிப்பு மற்றும் பேக்கரி கடைகளில்  தயாரிக்கும் உணவுப்பண்டங்களில் அதிக நிறங்கள் சேர்க்கத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு உணவு பாதுகாப்பு, மருந்து நிர்வாகத்துறையின் புதுக்கோட்டை மாவட்டப்பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் இன்று(31.10.2020) நடைபெற்ற உணவக உரிமையாளர்களுடனான ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் ஆர். ரமேஷ்பாபு பேசியதாவது:

அனைத்து உணவு வணிகர்களும் பதிவு / உரிமம் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். பதிவுச்சான்று - 100 ரூபாய் (ஆண்டு வருமானம் 12 இலட்சத்திற்குள்).உரிமம் - விற்பனையாளர் ரூ.2,000  (ஆண்டு வருமானம் இலட்சத்திற்கு மேல்) தயாரிப்பாளர்கள் ரூ. 3,000.   பொட்டாலமிடப்பட்ட உணவுகளில் தயாரிப்பு மற்றும் கலாவதி தேதி அச்சிடப்பட்ட வேண்டும்.

தயாரிப்பாளர் முகவரி, உணவு பாதுகாப்பு துறை பதிவு / உரிமம் எண், பேட்ச் எண், வெஜிடேரியன், நான் வெஜ் சின்னம், ஊட்டச்சத்து விபரங்கள், சேர்மானங்களின் விபரங்கள் அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.   அதிக நிறமி சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களை தயாரிப்பதோ விற்பனை செய்யவோ கூடாது.

 FIFO (First in First Out)  முறையில் வந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்தல் வேண்டும்.  உணவுப்பொருட்களை கையாள்பவர்கள் மருத்துவச் சான்றுடன் தொற்று நோய் இல்லை என்று சான்றும் பெற்றிருக்க வேண்டும்.  உணவுப்பொருட்களை விற்பனை செய்வதற்கும் கொள்முதல் செய்வதற்கும் முறையான ரசித்துகள் கணக்குகள் பராமரித்தல் வேண்டும்.  விற்பனை செய்யுமிடம் மற்றும் தயாரிப்பு இடம் போதிய வெளிச்சத்துடன் இருத்தல் வேண்டும்.  சமைத்த உணவுப்பொருட்களை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கக்கூடாது. 

உணவுப் பொருட்கள் வைக்கும் சேமிப்பு அறை பூச்சிகள், எலி புகாதவண்ணம் காற்றோட்ட வசதியுடன் இருக்க வேண்டும்.  உணவு சமயலர்கள் மற்றும் கையாளுபவர்கள் தன்சுகத்துடன், கையுறை, தலையுறை மற்றும் மேலங்கி அணிந்திருக்க வேண்டும்.  உணவு தயாரிப்பாளர்கள் உணவுப்பொருள் தயாரிப்பதற்கு சுத்தமான சுத்திகரிக்கப்பட்ட  குடிநீரை பயன்படுத்த வேண்டும்.  தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட நெகிழிப்பைகளை உணவுப்பொருட்களை பொட்டாலமிடுவதற்கு பயன்படுத்தகூடாது. 

உணவுப்பொருட்களை நுகர்வோர் அல்லாது பிற வணிகர்களுக்கு வழங்கினால் அவர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றுள்ளனரா என்று உறுதிசெய்ய வேண்டும். ஒருமுறை சமையலுக்கு பயன்படுத்திய எண்ணெய்யை மறுமுறை பயன்படுத்த கூடாது. உணவுகளிவுப்பொருட்களை முறையான மூடிய குப்பை தொட்டிகளை கொண்டு அகற்ற வேண்டும்.  ஒவ்வொரு உணவு வணிக நிறுவனத்தினரும் கைகழுவும் இடத்தில் கட்டாயம் கிருமி நாசினி வைத்து இருக்க வேண்டும்.

  உணவு தயாரிப்பிலோ அல்லது பொட்டலமிடும் பொழுதோ அச்சிடப்பட்ட செய்தித்தாள்களை பயன்படுத்தக்கூடாது.  தேனீர் கடைகளில் உணவுப்பொருட்களை மூடிய கண்ணாடி பெட்டிக்குள் வைத்து தூசி பாடிய வண்ணம் விற்பனைக்கு வைத்து இருக்க வேண்டும்.  இனிப்பு மற்றும் பேக்கரி கடைகளில் உணவு தின்பண்டகளுக்கு அதிக நிறங்கள் சேர்க்க கூடாது.  இனிப்பு மற்றும் பேக்கரி கடைகளில் பொட்டலமிடப்பட்ட இனிப்புகள், பிரட் மற்றும் ஏனைய தின்பண்டங்கள் அனைத்திலும் தயாரிப்பு தேதி, பொட்டலமிடப்பட்ட தேதி மற்றும் கலாவதி தேதி கண்டிப்பாக இடம் பெற்று இருக்க வேண்டும்.  

குறைந்த உப்பு, குறைந்த கொழுப்பு மற்றும் குறைந்த இனிப்பு உள்ள உணவுகளை நாம் அன்றாடம் பயன்படுத்த வேண்டும். தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட உணவுப்பொருட்களான பானமசாலா மற்றும் குட்கா போன்றவைகளை கண்டிப்பாக விற்பனை செய்யக்கூடாது. மேலும், உணவு கலப்படம் தொடர்பான புகார்களுக்கு..94440 42322  / 99449 59595  ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம் என்றார்.

இக்கூட்டத்தில், புதுக்கோட்டையிலுள்ள அனைத்து உணவகம் மற்றும் பேகக்ரி இனிப்பு, காரவகை தயாரிப்பு உரிமையாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த துண்டறிக்கை வழங்கப்பட்டது.


 

Top