logo
மருதிருவர் நினைவு நாள்: மேலூரில் நினைவஞ்சலி

மருதிருவர் நினைவு நாள்: மேலூரில் நினைவஞ்சலி

25/Oct/2020 01:12:56

மேலூர்: மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட நினைவு நாளையொட்டி (அக்.24) மேலூரில் அவர்களது உருவப்படத்துக்கு முக்கிய பிரமுகர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பேருந்து நிலையம் எதிரே சிவகங்கைச்சீமையின் மாமன்னர்கள் மருதுபாண்டியர் வெள்ளையர்களால் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்ட நாளில் அவர்களது நினைவுத்தூணுக்கு தமிழக அரசால் மரியாதை  செலுத்தப்படுகிறது. இதைப் போல, தமிழகம் முழுவதும் அவரது நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக, மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில், ரா. முத்தையை உள்ளிட்ட  முக்கிய பிரமுகர்கள் திரளாகக் கலந்து கொண்டு  அங்கு வைக்கப்பட்டிருந்த மருதிருவர் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.


Top