logo
வலையபட்டி அரசு பாப்பாயி ஆச்சி மருத்துவமனையில் காதுகேளாதோருக்கான இலவச மருத்துவமுகாம்

வலையபட்டி அரசு பாப்பாயி ஆச்சி மருத்துவமனையில் காதுகேளாதோருக்கான இலவச மருத்துவமுகாம்

16/Oct/2020 04:58:28

பொன்னமராவதி: புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி, வலையபட்டி அரசு பாப்பாயி ஆச்சி  தாலுகா அரசு மருத்துவமனையில் காதுகேளாதோருகான இலவச மருத்துவ பரிசோதனை முகாம் இன்று(16.10.2020) நடத்தப்பட்டது.

பாப்பாயி ஆச்சி தாலுகா மருத்துவமனையின் தலைமை மருத்துவர் செந்தமிழ்செல்வி தலைமையில் திருக்கோகர்ணம் அரசு மருத்துவமனை காது,மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர் டாக்டர்.அனிதா கலந்து கொண்டு இப்பகுதியைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட காதுகேளாதோருக்கு பரிசோதனை மேற்கொண்டு ஆலோசனை வழங்கினார்.

இதில், தலைமை மருத்துவர் செந்தமிழ்செல்வி பேசுகையில் அரசு பாப்பாயி ஆச்சி மருத்துவமனையில் ஒவ்வொரு மாதம் இரண்டாவது வார வியாழக்கிழமை மாவட்ட மனநல திட்ட மருத்துவ முகாம் நடைபெறுமென்றும் இதில் மனநலம் பாதிக்கப்பட்டோர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும், ஒவ்வொரு மாதம் மூன்றாவது வாரம் வியாழக்கிழமை காலை10 மணியளவில் பாப்பாயி ஆச்சி மருத்துவமனையில் காதுகேளாதோருக்கு இலவச பரிசோதனை முகாம் நடைபெறும் என்றும் பொன்னமராவதி சுற்று வட்டார பகுதி காதுகேளாதோர் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்  என்றும் குறிப்பிட்டார்.

 இதில், பாப்பாயி ஆச்சி மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Top