logo
கோபிசெட்டிபாளையம் அருகே விவசாய நிலத்திற்குள் புகுந்த காட்டு யானையால் வாழை மரங்கள் சேதம்

கோபிசெட்டிபாளையம் அருகே விவசாய நிலத்திற்குள் புகுந்த காட்டு யானையால் வாழை மரங்கள் சேதம்

31/Jan/2021 06:32:00

ஈரோடு, ஜன. கோபிசெட்டிபாளையம்அருகேஉள்ளகணக்கம்பாளையம் சுட்டக்கரடு பகுதியில்விவசாயநிலத்திற்குள் புகுந்தகாட்டுயானையால் 100-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்துள்ளது. உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுவதை வனத்துறையினர் தடுக்கவேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகேஉள்ள தூக்கநாயக்கன்பாளையம் வனசரகத்திற்குள்பட்ட சுமார் 2 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் கள்ளிபட்டிகணக்கம் பாளையம், வேதபாறைவளையபாளையம், எரக்காட்டூ,ர் துறையம்பாளையம் பங்களாபுதூர் உள்ளிட்டபகுதிகள் வனப்பகுதியையொட்டி விவசாய விளை நிலங்கள் உள்ளது. இப்பகுதிகளில் அடிக்கடி விவசாயவிளைநிலங்களுக்குள் காட்டுயானைகள், மான்கள், காட்டெருமைகள், காட்டுப்பன்றிகள் புகுந்து சாகுபடி பயிர்களை அதிகளவில் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன.

 வனத்துறையினர் சார்பில் அகழிகள் வெட்டப்பட்டுள்ளநிலையிலும் பாராமரிப்பின்றி அகழிகள் மண் மூடிப்போனதால் வன விலங்குள் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது. 

இந்நிலையில் கணக்கம்பாளையம் சுண்டக்கரடு பகுதி விவசாயி  தெட்சிணாமூர்த்தி  மூன்று ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வாழைத் தோட்டத்திற்குள்  குட்டியுடன் புகுந்த மூன்றுக்கும் மேற்பட்ட காட்டுயானைகள் 100-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை மிதித்தும் அழித்தும் சேதப்படுத்தியது. இதனால் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேல் இழப்பீடுஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இது குறித்து  விவசாயி தெட்சிணாமூர்த்தி  கூறியதாவது:  கடந்த ஒரு மாதமாக நாள் தோறும் யானைகளை விரட்டிவந்த நிலையில் சனிக்கிழமை  இரவும் விவசாய தோட்டத்திற்குள் யானைகள் புகுந்து சேதப்படுதியுள்ளன. தனகு வாழைத்தோட்டத்தில் சுமார் 3 ஆயிரம்  வாழைமரங்கள் உள்ள நிலையில் இனி நாள்தோறும் யானைகள் படையெடுத்தால் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.  சேதமடைந்த வாழைமரங்களை டி.என்.பாளையம் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு சென்றதாகவும் யானைகளை தடுக்க கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்துவதாகவும்  விவசாயி தெட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.

 ஆனால் வனவிலங்களைவிரட்டச்செல்லும் விவசாயிகளின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்றும் வனவிலங்கு மனிதமோதல்கள் அடிக்கடி ஏற்படுவதாகவும் அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்னர். மேலும், வனத்துறையினர் வனத்தையொட்டியுள்ள பகுதிகளில் ஆழமாக அகழிவெட்டி பாராமரிக்க வேண்டும். அல்லது மின்வேலி அமைத்து வனவிலங்கு களைத் தடுக்கவேண்டும் என்றும் வனவிலங்குகளினால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பீடுகளை வனத்துறை வழங்கவேண்டும் என்றும் இப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Top