logo
மத்திய அரசின் வேளாண் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்: கார்த்தி சிதம்பரம் தொடங்கி வைத்தார்.

மத்திய அரசின் வேளாண் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்: கார்த்தி சிதம்பரம் தொடங்கி வைத்தார்.

11/Oct/2020 12:18:59

புதுக்கோட்டை: மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் புதுக்கோட்டை மாவட்டம், புளிச்சங்காடு கைகாட்டியில் கையெழுத்து இயக்கத்தை சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தொடங்கிவைத்தார்.

  புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள புளிச்சங்காடு கைகாட்டியில், விவசாயிகளை பாதிக்கும் மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் டி.புஸ்பராஜ், மாவட்டத் தலைவர் தர்ம.தங்கவேல், வடகாடு ஊராட்சித் தலைவர் எஸ்.மணிகண்டன்  உள்பட காங்கிரஸ் கட்சியினர் பலர் பங்கேற்றனர்.


Top