logo
வீட்டிற்குள் புகுந்த கருநாகப் பாம்பை பிடித்த வனத்துறையினர்

வீட்டிற்குள் புகுந்த கருநாகப் பாம்பை பிடித்த வனத்துறையினர்

23/Sep/2020 11:10:50

ஈரோடு: சத்தியமங்கலத்தில் வீட்டிற்குள் புகுந்த கருநாகப் பாம்பை வனத்துறையினர்  பிடித்து வனப் பகுதிக்குள் விட்டனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த ரங்கசமுத்திரம் விரிவாக்கம்1-ஆவது  வீதியை சேர்ந்த முகமது தாரிக்.  என்பவர் தனது வீட்டருகே உள்ள கடைக்கு செல்வதற்காக தனது வீட்டைப் பூட்டி சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது பாம்பு ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்ததார். இவர் அளித்த தகவலின் பேரில்  சத்தியமங்கலம் வனத்துறை ஊழியர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு  கட்டிலுக்கு அடியில் பதுங்கி இருந்த கருநாகப்பாம்பை  உயிருடன் பிடித்து அருகே உள்ள வனப்பகுதியில் விட்டனர்.  குடியிருப்பு  பகுதியில் பாம்பு புகுந்த சம்பவம் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Top