logo
கொரோனாவுக்கு ஒரே நாளில் 918 பேர் பலி - பாதிப்பு 70,53,807 ஆக உயர்வு

கொரோனாவுக்கு ஒரே நாளில் 918 பேர் பலி - பாதிப்பு 70,53,807 ஆக உயர்வு

11/Oct/2020 12:34:14

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால்  ஒரே நாளில் 918-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். புதிதாக 74,343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் 918 பேர் உயிரிழந்தனர்இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,08,334-ஆக அதிகரித்தது. இதில், அதிகபட்சமாக, மகாராஷ்டிரத்தில் 40,348 பேர், கர்நாடகத்தில் 9,993 பேர், உத்தரபிரதேசத்தில் 6,293 பேர், ஆந்திரத்தில் 6,229 பேர், கேரளத்தில் 1,001 உயிரிழந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை காலை வரை புதிதாக, 74,383 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு 70,53,807-ஆக அதிகரித்தது. இதுவரை 60,77,976 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இது மொத்த பாதிப்பில் 86.17 சதவீதமாகும்.

நாடு முழுவதும் 8,67,496 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது மொத்த பாதிப்பில் 12.30 சதவீதமாகும். இரண்டாவது நாளாக, சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்துக்கும் கீழே குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தகவல்படி, நாட்டில் கடந்த சனிக்கிழமை வரை 8,68,77,242 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், சனிக்கிழமை மட்டும் 10,78,544 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Top