10/Oct/2020 09:01:33
புதுக்கோட்டை: சிவகங்கை மக்களவை உறுப்பினர் தலைவர் கார்த்தி ப சிதம்பரம் ஆலங்குடி, திருமயம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவுள்ள பின்வரும் நிகழ்சியில் பங்கேற்கவுள்ளதாக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தகவல் வெளியிட்டுள்ளது.
ஞாயிறு (11/10/2020) மாலை 4 மணிக்கு ஆலங்குடி பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் சந்திப்பு. மாலை 4:30 மணிக்கு புளிசங்காடு கைகாட்டியில் விவசாய மசோதாக்களை எதிர்த்து கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைக்கிறார். மாலை 5 மணிக்கு சிலட்டூர் ஊராட்சி உயர் மின் கோபுர விளக்கு பகுதியில் கட்சியினர், பொதுமக்கள் சந்திப்பு.மாலை 6 மணிக்கு அரிமளம் உயர் மின் கோபுர விளக்கு நிகழ்சியில் பங்கேற்பதாகவும்,
தங்கள் பகுதியில் உள்ள மாநில மாவட்ட வட்டார நகர கிராம காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்களுடன் கலந்து கொள்ள வேண்டுமெனவும் புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் (தெற்கு) தர்ம தங்கவேல் தகவல் தெரிவித்துள்ளார்.