logo

ஈரோடு மாவட்டம் கோபி அருகே போலி டாக்டர் கைது

27/May/2021 12:46:40

ஈரோடு, மே :ஈரோடு மாவட்டம், கோபி அருகே  பொதுமக்களுக்கு  மருத்துவம் பார்த்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர். 

 ஈரோடு மாவட்டம், கோபி கரட்டுப்பாளையம் ரோடு, காசிபாளையத்தில் நாகராஜ் என்பவர் அவரது வீட்டிருகே வசிக்கும்  மக்களுக்கு அலோபதி மருத்துவம் பார்த்து, மருந்து மாத்திரை களை வழங்கி வருவதாக புகார் வந்தது. 

இதன்பேரில், காசிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் யசோதா பிரியா, சுகாதார ஆய்வாளர், சுகாதார மேற் பார்வையாளர், கிராம நிர்வாக அலு வலர் ஆகியோருடன் கடத்தூர் போலீசார் புதன்கிழமை இரவில்  நாகராஜ்(58) வீட்டில் ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது, மருத்துவ கவுன்சில் அனுமதியின்றி மருந்துகள், மாத்திரைகள், ஊசிகள் போன் றவற்றை வைத்திருந்தது தெரியவந்தது. மேலும், நாகராஜ் மருத்துவ படிப்பு படிக் காமலும், மருத்துவ சான்று ஏதுவும் இல்லாமல் மக்களை ஏமாற்றி சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது.

 இதையடுத்து, கடத்தூர் போலீசார் நாகராஜ் மீது மோசடி மற்றும் மருத்துவ கவுன்சில் சட் டத்தின் படி வழக்கு பதிந்து கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத் தனர். கைதான நாகராஜிடம் இருந்து 180 காய்ச்சல் மாத்திரைகள், ஊசி மருந்துகள், மருந் துகள் கொள்முதல் செய்யப்பட்ட ரசீது போன்றவற்றை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். நாகராஜ் -க்கு மருந்துகள் வழங்கிய முகவர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் விசார ணை நடத்தி வருகின்றனர்.

Top