logo
ஈரோடு மாவட்டத்தில் 173 இடங்களில் 8,650 பேருக்கு கோவிஷில்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது

ஈரோடு மாவட்டத்தில் 173 இடங்களில் 8,650 பேருக்கு கோவிஷில்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது

05/Aug/2021 11:42:28


ஈரோடு, ஆக: ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 173 இடங்களில் 8,650 பேருக்கு கோவிஷில்டு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தற்போது, கொரோனா தொற்று மீண்டும் படிப்படியாக உயர துவங்கி இருப்பதால், கொரோனா தடுப்பு பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி உள்ளது. அதேசமயம் மக்களை தொற்றில் இருந்து பாதுகாக்க கொரோனா தடுப்பூசி போடும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது. 

முதலில் சுழற்சி முறையில் தடுப்பூசி போடப்பட்ட வந்தது. இந்த இடத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு வாக்குச்சாவடி அடிப்படையில் அந்தந்த தேர்தல் நிலைய அலுவலர்கள் மூலம் வீடுகளில் டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசி போடப்படுகிறது

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் கோவிஷில்டு தடுப்பூசி முகாம் வாக்குச்சாவடி அடிப்படையில்  173 இடங்களில் மொத்தம் 8 ஆயிரத்து 650 பேருக்கு போடப்பட்டது. மக்கள் ஆர்வத்துடன் சென்று நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர்

Top